தூத்துக்குடி
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கடற்கரை மாவட்டங்களில் தமிழக முதல்வரின் பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியம் கிரீன் நாடா சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் நாட்டு நலப்பணி திட்டம் இணைந்து 1 கோடி பனை விதைகள் நடும் நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார் முதல் பெரியதாழை வரை 163 கிலோமீட்டர் தூரத்திற்கு 15 லட்சம் பனை விதைகள் நடும் துவக்க விழா தூத்துக்குடி கேம்ப்-2 கடற்கரையில் நடைபெற்றது.
வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் பனை விதைகள் நட்டி துவக்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் திமுக மாநகரச் செயலாளர் ஆனந்தசேகரன், சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அற்புதராஜ், மாவட்ட அவைத் தலைவர் கண்டிவேல், மாவட்ட பொருளாளர் பழனிவேல், மாவட்ட துணைச் செயலாளர் அருள்ராஜ், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் முத்துக்குமார், மாவட்ட தொண்டர் அணி செயலாளர் முத்து செல்வம், மாவட்ட பிரதிநிதி பெரியசாமி, மாநகரச் செயலாளர் உதயசூரியன், நாடார் பேரவை தெற்கு மாவட்ட தலைவர் அருண் சுரேஷ்குமார், மாநகர வார்டு செயலாளர்கள் செந்தூர்பாண்டி, செல்வராஜ், ராஜா, மற்றும் ஆல்கண் டிரஸ்ட் நிறுவனர் அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல், திமுக பகுதி செயலாளர் மேகநாதன், சிறுபான்மை பிரிவு அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், மாநகர மகளிர் அணி அமைப்பாளர் ஜெயக்கனி, நெசவாளர் அணி துணை அமைப்பாளர் குமரன், கவுன்சிலர் விஜயகுமார், காமராஜ் கல்லூரி என்சிசி பேராசிரியர் ஆனந்தராஜ், மற்றும் வேளாண்துறை அதிகாரிகள், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள், கல்லூரி மாணவர்கள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பனை விதைகள் நடவு செய்தனர்.

