தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி 3வது வார்டு ஹவுசிங்போர்டு பகுதியில் 20 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை பழுதடைந்து மோசமான நிலையில் இருந்து வந்தது. அதை மாற்றி புதிய பயணிகள் நிழற்குடை அமைத்து தர வேண்டும் என்று தெற்கு மாவட்ட திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளரும் மாநகராட்சி கணக்கு குழு தலைவருமான ரெங்கசாமி பகுதி மக்கள் சார்பில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையாவிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனையடுத்து ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 20 லட்சம் ஓதுக்கீடு செய்யப்பட்டு புதிய பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிக்கு சண்முகையா எம்.எல்.ஏ அடிக்கல் நாட்டு பூமிபூஜையை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கவுன்சிலர் ரெங்கசாமி, உதவி செயற்பொறியாளர் பிரின்ஸ் ராஜேந்திரன், தெற்கு மாவட்ட ஆதிதிராவிட நல அணி அமைப்பாளர் ராஜேந்திரன், பகுதி செயலாளர் சிவகுமார், மாவட்ட பொறியாளர் அணி துணைத்தலைவர் தர்மராஜ், மாவட்ட பிரதிநிதிகள் புவேஸ்நாதன், செல்வகுமார், பகுதி பொருளாளர் துரைராஜ், துணைச்செயலாளர் மகேஸ்செல்வம், வட்டச்செயலாளர்கள் ராஜன், தெய்வேந்திரன், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் அலெக்ஸ்ராஜ், அவைத்தலைவர் ராஜசேகர், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் பிரவீன்குமார், மற்றும் செல்லையா, முருகேசன், ராஜசேகர், பத்மநாபன், கப்பிக்குளம் பாபு, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

