• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி மாநகராட்சியின் கல்விச் சேவையை பாராட்டி மத்திய அமைச்சர் மேயர் ஜெகன் பெரியசாமியிடம் விருது வழங்கினார். 

policeseithitv by policeseithitv
September 27, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி மாநகராட்சியின் கல்விச் சேவையை பாராட்டி மத்திய அமைச்சர் மேயர் ஜெகன் பெரியசாமியிடம் விருது வழங்கினார். 
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகளில் சிறப்பான கல்வி வழங்குவதை பாராட்டி மேயர் ஜெகன் பெரியசாமிக்கு மத்திய அரசு சார்பில் விருது வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மாணவர்களுக்கு, சிறப்பான கல்வியினை தனியார் பள்ளிகளுக்கு நிகராக வழங்கி வருகின்றனர். மாநகராட்சி பள்ளி குழந்தைகளுக்கு, சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு பணிகளை மாநகராட்சி செயல்படுத்தி வருகிறது. மேலும், மாநகராட்சிக்குட்பட்ட தெற்கு புதுத்தெரு பள்ளி, சாமுவேல்புரம் பள்ளி, ஜின் பாக்டரி பள்ளி ஆகிய பள்ளிகளிலும், ஸ்மார்ட் கிளாஸ் ஏற்படுத்தப்பட்டு பல்வேறு நவீன வசதிகள் உருவாக்கப்பட்ட நிலையில், நடப்பாண்டில் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்திய அளவில் 100 பெரிய நகரங்களில் சீர்மிகு நகரத் திட்டங்களில் நடைபெற்ற பணிகளுக்கான 2022ம் ஆண்டுக்கான போட்டியில், பாதுகாப்பான கட்டிடம், நூலகம், உணவகம், சீர்மிகு வகுப்பறை, நவீன இருக்கை வசதி, தூய்மையான பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிப்பறை அடங்கிய சிறப்பான சூழலில் கையடக்க கணினி வசதியுடன் கல்வி கற்பிக்கப்படும் மகத்தான பணிக்காக மத்திய அரசு தூத்துக்குடி மாநகராட்சிக்கு இந்திய அளவில் மூன்றாவது இடம்பிடித்தது.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் மற்றும் பெட்ரோலியம், இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்திப் சிங் பூரி மேயர் ஜெகன் பெரியசாமிக்கு விருது வழங்கி கௌரவித்தார். விழாவில், மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், செயற்பொறியாளர் பாஸ்கர், பொறியாளர் சரவணன், உதவி செயற்பொறியாளர் பிரின்ஸ் ராஜேந்திரன், வேப்டாப் நிறுவனம் அறிவழகன், உட்பட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Previous Post

முறப்பநாடு வி.ஏ.ஓ. லூர்து பிரான்ஸிஸ் நஷ்ட ஈடு கோரிய வழக்கை தள்ளுபடி செய்து தூத்துக்குடி மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பு

Next Post

தூத்துக்குடியில் அமைச்சர் சுப்பிரமணியன் 29ம் தேதி கலந்து கொள்ளும் நிகழ்ச்சி குறித்து அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை 

Next Post
தூத்துக்குடிக்கு வரும் 4ம் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் கூட்டறிக்கை அழைப்பு

தூத்துக்குடியில் அமைச்சர் சுப்பிரமணியன் 29ம் தேதி கலந்து கொள்ளும் நிகழ்ச்சி குறித்து அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை 

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In