தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு வி.ஏ.ஓ.வாக இருந்த லுார்து பிரான்ஸிஸ் என்பவர் மணல் கடத்தல் விவகாரத்தில் கடந்த ஏப்ரல் மாதம் கொலை செய்யப்பட்டார்.
இவர் கடந்த 2018- ம் ஆண்டு சேர்வைக்காரன்மடம் வி.ஏ.ஓ-வாக பணியாற்றிய போது பெண் தலையாரியை தாக்கிய வழக்கில் அப்போதைய மாவட்ட ஆட்சியராக இருந்த சந்தீப் நந்தூரி சஸ்பென்ட் செய்தார். இதை தொடர்ந்து, துாத்துக்குடி மாவட்ட ஆட்சியர், உதவி ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மீது தன்னை இடை நீக்கம் செய்தது தொடர்பாக ரு.1 லட்சம் நஷ்டயீடு வழங்கக்கோரிய வழக்கு தூரத்துக்குடி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் ஏற்கனவே வி.ஏ.ஓ. லூர்து பிரான்ஸிஸ் 3 முறை ஆஜராகி வாக்குமூலம் அளித்திருந்த நிலையில், மாவட்ட உரிமையியல் நீதிபதி சுமிதா வழக்கினை தள்ளுபடி செய்து தீர்பளித்தார். இந்த வழக்கில் உயர் அதிகாரிகளுக்காக அரசு வழக்கறிஞர் சுபேந்திரன் ஆஜராகினார்.

