தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டத்தையடுத்து, ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் வேட்பாளர் தேர்வு, கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் அமமுகவின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. கோவில்பட்டி தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவில்பட்டி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் கடம்பூர் ராஜூவை எதிர்த்து டிடிவி தினகரன் களம் காண்கிறார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஒன்றிய சேர்மன் மாணிக்கராஜ் கயத்தாறு பகுதியை சேர்ந்தவர் . ஏரியாவில் செல்வாக்கு உள்ளவர். அந்த வாக்கு வங்கி கோவில்பட்டி தொகுதிக்குத்தான் வரும் என்று கூறப்படுகிறது
தென் மாவட்டத்தின் மைய பகுதியில் அதன் பொதுச்செயலாளர் தினகரன் போட்டியிடும் போது அதன் அதிர்வுகள் சுற்றுவட்டார பகுதிகள் அனைத்திலும் எதிரொலிக்கும் என்று தினகரன் எதிர்பார்க்கிறார் .

