தூத்துக்குடி.
தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பெரியசாமி பொறுப்பேற்ற காலம் முதல் தொலைநோக்கு பார்வையோடு பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார். இப்பணிகளுக்கிடையில் அரசியல் மற்றும் சமூக நல பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
பல்வேறு வகையில் உதவிகள் கேட்டு வரும் ஏழை-எளிய மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் மற்;றும் பல தரப்பினர்களுக்கும் இல்லையென்று சொல்லாமல் ஏதாவது ஒருவகையில் உதவிகள் செய்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தூத்துக்குடியில் ஒருவர் திடீரென இறந்தது கிடந்தார். அவருக்கு உதவிட யாரும் முன்வராத நிலையில் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்வதற்கு ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து கொடுத்து உதவி செய்தார். அதுபோல் கட்சி பிரமுகர்களுக்கும் பாரபட்சமின்றி உதவிகள் செய்து வருகிறார்.
மாநகராட்சி திமுக கவுன்சிலர் ரிக்டா மற்றும் அவரது கணவர் மீனவரணி துணை செயலாளர் ஆர்தர் மச்சாது ஆகியோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். தற்போது உடல் நலம் பெற்று வீடு திரும்பிய அவர்களை அவர்களது இல்லத்திற்கு சென்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மாநகராட்சி மண்டல தலைவரும் பகுதி திமுக செயலாளருமான நிர்மல்ராஜ் மற்றும் பிரபாகர், ஜோஸ்பர் உடனிருந்தனர்.

