தூத்துக்குடி
தமிழ்நாடு அரசு தூத்துக்குடி நகராட்சிக்கு சலவை துறைக்காக மாப்பிள்ளையூரணி கிராமத்தில் ஒதுக்கிய சர்வே எண்: 223/6 நிலத்தில் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு பகுதி நிலத்தை தங்களுக்குரியது என போலி பட்டா தாக்கல் செய்து உரிமை கோரி துரைசிங்கம் என்பவர் குடும்பத்தினர் தமிழ்நாடு அரசு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் மீது தாக்கல் செய்த வழக்கு மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
விசாரணை செய்த நீதிபதி சுமிதா மேற்படி வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கினார். அரசு சார்பில் அரசு வழக்கறிஞர் சுபேந்திரன் ஆஜரானார். இச்சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

