தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் புதிய தார்சாலை பேவர்பிளாக் சாலை அமைக்கப்பட்டு வருகின்றன. அப்பணிகள் முழுமையாக நல்லமுறையில் நடைபெறுகிறதா. என்று சூழற்சி முறையில் எல்லா பகுதிகளிலும் ஆய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் 13வது வார்டுக்குட்பட்ட தனசேகரன்நகர் கிழக்கு பகுதியில் புதிய தார்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்பணியை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்டலத்தலைவர் வக்கீல் பாலகுருசாமி, மாவட்ட பிரதிநிதி செல்வகுமார், வட்டப்பிரதிநிதி பாஸ்கர், மணி, அல்பட், உள்பட பலர் உடனிருந்தனர்.

