• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

முத்தையாபுரம்; சலவை தொழிலாளிக்கு உதவி செய்த அமைச்சர் கீதாஜீவன்

policeseithitv by policeseithitv
September 21, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
முத்தையாபுரம்; சலவை தொழிலாளிக்கு உதவி செய்த அமைச்சர் கீதாஜீவன்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடியில் உள்ள தனது இல்லத்தில் உள்ள அலுவலகம், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், வடக்கு மாவட்ட திமுக அலுவலகம் போன்றவற்றில் பொதுமக்கள் எந்தநேரமும் நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார்.

இதையும் கடந்து தூத்துக்குடி தொகுதிக்குட்பட்ட பகுதி முழுவதும் நேரடியாக வார்டு வாரியாக களமிறங்கி பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்று வருகிறார். அதில், சாலை வசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு, வேலைவாய்ப்பு, நலத்திட்ட உதவி, பென்சன் என பல்வேறு கோரிக்கை மனுக்கள் வரப்பெற்று அரசு சார்ந்த திட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அந்த மனுவை அனுப்பி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். பல நலத்திட்ட உதவிகள் மாவட்ட திமுக கழகம் சார்பிலும் தனது சொந்த நிதியில் இருந்தும் வழங்கி வரும் நிலையில், தூத்துக்குடி மாநகராட்சி 52வது வார்டுக்குட்பட்ட முத்தையாபுரம் சுந்தர்நகர் பகுதியை சார்ந்த சலவை தொழிலாளி வேலுச்சாமி, இஸ்திரி பெட்டி வேண்டி புதன் கிழமை மாலையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் அமைச்சர் கீதாஜீவனிடம் நேரில் மனு அளித்திருந்தார். அம்மனுவை கனிவுடன் பரிசீலனை செய்த அமைச்சர் கீதாஜீவன் வியாழன் அன்று காலை முத்தையாபுரம் சுந்தர்நகர் பகுதியில் வைத்து சலவை தொழிலாளி வேலுச்சாமிக்கு இஸ்திரி பெட்டி வழங்கினார். அமைச்சர் கீதாஜீவனிடம் மனு வழங்கிய ஒரேநாளில் அம்மனு மீது விரைந்து நடவடிக்கை எடுத்த மனிதநேயமிக்க செயலை பொதுமக்கள் பலர் பாராட்டினார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், மாநகராட்சி மண்டல தலைவர் வக்கீல் பாலகுருசாமி, கவுன்சிலர்கள் ராஜதுரை, முத்துவேல், சுயம்பு, விஜயகுமார், பட்சிராஜ், பகுதி செயலாளர் மேகநாதன், நெசவாளர் அணி துணை அமைப்பாளர் குமரன், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், வட்ட செயலாளர்கள் நடேசன் டேனில், பிரசாந்த், வட்ட பிரதிநிதி பாஸ்கர் உள்பட பலர் உடனிருந்தனர்.

Previous Post

தூத்துக்குடி 59வது வார்டு பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களிடம் குறை கேட்பு

Next Post

சலவை துறைக்கு வழங்கிய 1 கோடி மதிப்புள்ள நிலத்தை உரிமை கோரிய வழக்கு தூத்துக்குடி நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பு

Next Post
சலவை துறைக்கு வழங்கிய 1 கோடி மதிப்புள்ள நிலத்தை உரிமை கோரிய வழக்கு தூத்துக்குடி நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பு

சலவை துறைக்கு வழங்கிய 1 கோடி மதிப்புள்ள நிலத்தை உரிமை கோரிய வழக்கு தூத்துக்குடி நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In