தூத்துக்குடி
திராவிட முன்னேற்ற கழகத்தின் 15-வது கழக தேர்தல் முறையாக மாநிலம் முழுவதும் தேர்தல் ஆணையம் வழிமுறைக்கு இணங்க தேர்தல் நடைபெற்று கிளை செயலாளர் முதல் மாவட்ட செயலாளர் வரை முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். திமுக தலைவராக முதலமைச்சர் ஸ்டாலின், பொதுச்செயலாளராக அமைச்சர் துரைமுருகன், பொருளாளராக பாலு, துணை பொதுச்செயலாளராக கனிமொழி எம்.பி உள்ளிட்ட உயர்மட்ட முக்கிய நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அதன்பின் திமுகவின் கட்டமைப்பு படி 23 அணிகள் முறையாக செயல்படுகின்றன. அதற்கும், மாநில, மாவட்ட, ஒன்றிய அளவில் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத்திலும் பொறுப்புக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் நேர்காணல் நடத்தப்பட்டு, திமுக ஆட்சியில் இல்லாத 10 ஆண்டுகள் தொடர்ந்து திமுகவில் பணியாற்றியதையும், கழகம் அறிவித்த போராட்டங்களில் பங்கெடுத்துக் கொண்ட விவரத்தையும் கேட்டறிந்து, குறிப்பாக அவர்களில் தீவிர களப்பணி ஆற்றுபவர்கள் யார் என்பதை கண்டறிந்து
அதன்படி மாநகர திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளராக ஆரோக்கிய ராபின் அசோகன், துணை அமைப்பாளர்களாக செல்வக்குமார், ராஜா, அன்பழகன், பிரதீப், சில்வெஸ்டர் சாமுவேல், ஆகியோரை தலைமை கழகத்தால் நியமணம் செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவனை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அப்போது அமைச்சர் கீதாஜீவன் கூறுகையில் தமிழக முதலமைச்சர் தளபதியார் ஆட்சியில் செய்த சாதனைகளையும் திட்டங்களையும் மாநில வளர்ச்சி பணிகளையும் அனைத்து தரப்பினர்கள் மத்தியிலும் கொண்டு போய் சேர்க்க வேண்டும். 2024ல் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் விளையாட்டு மேம்பாட்டு அணியின் பங்கு அதிகம் இருக்க வேண்டும் அதிக உறுப்பினர்களை சேர்த்து மற்ற மாவட்டங்களை காட்டிலும் நமது மாவட்டம் முன்னோடி மாவட்டமாக திகழ்வதற்கு ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளரும் மாநகராட்சி தெற்கு மண்டல தலைவருமான வக்கீல் பாலகுருசாமி, மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், மற்றும் கருணா, மணி, அல்பட், உடனிருந்தனர்.

