சென்னை கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடுவது குறித்து மாநில திமுக நெசவாளர் அணி ஆலோசனைக் கூட்டம் சென்னை தி.நகரில் உள்ள அக்காடு ஹோட்டலில் மாநில நெசவாளர் அணித் தலைவர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமையில், அணி செயலாளர்கள், மற்றும் துணைச் செயலாளர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது மாநில துணைத்தலைவர் நாகலிங்கம் வரவேற்புரையாற்றினார்.
கூட்டத்தில் திமுக துணை பொதுசெயலாளரும், மாநில உயர்கல்வி துறை அமைச்சருமான பொன்முடி, மாநில கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி, திமுக தலைமை அமைப்புச் செயலாளர் பாரதி, சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் சிற்றரசு ஆகியோர் கலந்து கொண்டு பேசுகையில்
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் கழக தலைவரும் தமிழக முதலமைச்சருமான தளபதியார் 24 மணிநேரத்தில் 20 மணி நேரம் தமிழ்நாட்டு மக்களுக்காக தொலை நோக்கு பார்வையிலான திட்டங்கள் அறிவிக்கப்பட்டு மக்களை சென்றடையும் வகையில் ஓவ்வொரு மாவட்டமாக ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு நடைபெற்ற பணிகளையும் நடைபெற வேண்டிய பணிகளையும் விரைவுப்படுத்தி மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டு வருகிறார். திமுக ஆட்சி அமைந்தபின் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், புதுமைப்பெண் திட்டத்தில் 1000 கல்வி உதவிதொகை, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் புதிய தொழிற்சாலைகள் அமையும் வகையில் வெளிநாட்டு தொழில் நிறுவனங்களுடன் ஓப்பந்தங்கள் போட்ப்பட்டு தொழில் செய்வதற்கு சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. என்பதை எடுத்துரைத்து எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஆட்சியின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் எந்த திட்டங்களும் செயல்படுத்தாமல் அவர்களுடைய நலனை மட்டுமே பார்த்து கொண்டனர். மக்கள் நலனை பற்றியும் நாட்டு நலனை பற்றியும் சிந்திக்கும் முதல்வர் தளபதியார் செய்த சாதனைகள் ஏராளம், அதை அனைத்து தரப்பினருக்கும் நெசவாளர் அணியினர் எடுத்து செல்ல வேண்டும்; 2024ல் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கு முழுமையாக உழைக்க வேண்டும் என்று பேசினார்கள்.

கலைஞருடைய நூற்றாண்டு விழாவை நெசவாளர் அணி சார்பில் சிறப்பாக நடத்திடவும், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் நமது ஆட்சியில் நெசவாளர்கள், மற்றும் கைத்தறி தொழிலில் ஈடுபட்டு வரும் அனைவரும் பயன்பெற்று வரும் நல்ல ஏராளமான திட்டத்தை செயல்படுத்தி வரும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிவித்தும் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாநில நெசவாளர் அணி துணைச்செயலாளர் வசந்தம் ஜெயக்குமார், மாவட்டத் தலைவர்கள், அமைப்பாளர்கள், மற்றும் மாநகரத் தலைவர்கள், அமைப்பாளர்கள், துணைத் தலைவர்கள், துணை அமைப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

