தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் துறைமுகம், சிப்காட்வளாகம், இரயில்வே நிலையம், என பல்வேறு தொழில்சார்ந்த தொழிற்சாலைகளும் நிறுவனங்களும் நிறைந்த பகுதியாகும் சற்று தூரத்தில் விமான நிலையமும் இருந்து வருகிறது. 24 மணிநேரமும் செயல்படும் வகையில் விரிவாக்கம் மற்றும கட்டமைப்பு பணிகள் கனிமொழி எம்.பி முயற்சியால் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்திய துறைமுகங்களில் மிகப்பெரிய துறைமுகங்கள் பட்டியலில் தூத்துக்குடி துறைமுகம் இடம் பெற்று சர்வதேச அளவில் ஏற்றுமதி இறக்குமதி செய்து சாதனை படைத்து மத்திய மாநில அரசுகளுக்கு பல்வேறு வகையில் வருவாய் ஈட்டி கொடுக்கும் மிகப்பெரிய துறைமுகமாக வளர்ந்து வருகிறது. இந்த நிலையில் அனைவருக்கும் கட்டமைப்பு பணிகளை முறைப்படுத்தி கொடுக்க வேண்டும். என்ற கடமை மாநகராட்சிக்கு உள்ளது. என்பதை உணர்ந்து செயல்பட்டு வரும் மாநகராட்சி நிர்வாகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் வெற்றிக்குபின் மக்கள் பிரதிநிதிகள் மக்கள் பணியை விரைந்து செய்து வருகின்றன, அதனடிப்படையில் மாநகராட்சியோடு இணைக்கப்பட்ட புறநகர் பகுதிகளும் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இதுகுறித்து மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் பணிகள் நடைபெற்றது. என்று சொல்வதை விட ஆமை வேகத்தில் இயங்கியது. என்று தான் சொல்ல வேண்டும் காரணம் வழக்கமான பணிகள் என்பது ஓருபுறம் இருந்தாலும் எதிர்கால தலைமுறையினரை அழைத்து செல்லும் வகையிலும் வாகன பெருக்கம் மக்கள் தொகை அதிகரிப்பு சாலை விரிவாக்கம் ஆக்கிரமிப்பு அகற்றம் பசுமையை உருவாக்குதல் சீரான குடிநீர் என்ற கட்டமைப்பு பணிகளை முறைப்படுத்தி செய்யாத காரணத்தால் கடந்த சில வருடங்களுக்கு முன்பு எதிர்பாராமல் அதிக அளவில் பெய்த மழையால் மாநகர பகுதியில் உள்ள மக்கள் சில பகுதிகளில் ஏற்பட்ட மழைநீர் பாதிப்பு எந்த அளவிற்கு இருந்தது என்பதை இந்த நாடே அறியும் அந்த நிலையெல்லாம் இனிவரும் காலங்களில் இருக்க கூடாது. என்று தமிழக முதலமைச்சர் தளபதியார் உத்தரவிற்கிணங்க புதுமையான வகையில் புதிய பூங்காக்கள் உருவாக்கப்பட்டு கழிவுநீர் கால்வாய்கள் என பல பணிகளை மேற்கொண்டு 85 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. அதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு தூத்துக்குடியில் பெய்த கனமழையின் போது பாதிக்கப்பட்ட பகுதிகளில் எவ்வித மழைநீர் தேக்கமும் ஏற்பாடாத வகையில் சிறிது நேரத்தில் அப்பகுதி வழக்கமான சாலை என்ற நிலைக்கு வந்துள்ளது. தமிழக முதலமைச்சர் தலைமை செயலகத்தில் நடைபெற்ற அமைச்சர்கள் அதிகாரிகள் ஆய்வு கூட்டத்தின் போது தமிழகம் முழுவதும் சாலை பணிகளை முழுமையாக நல்லமுறையில் தரமாக செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். ஓரு சாலை சரியில்லை என்றால் அப்பகுதியில் செல்லும்பொதுமக்கள் உடனே அரசாங்கத்தை குறை சொல்லுவார்கள். அந்த குறை வரக் கூடாது. என்பதை கடமை உணர்வோடு அறிவுரை வழங்கியதின் பேரில் மாநகராட்;சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் பருவமழைக்கு முன்பு முழுமையாக சாலைகள் அமைக்கப்பட வேண்டும். என்ற அடிப்படையில் தமிழக முதலமைச்சரும் சிறப்பு நிதி ஓதுக்கப்பட்டு முழுமையாக பணிகள் நடைபெற்று வருகின்றன. ஓவ்வொரு ஓப்பந்ததாரர்களையும் நல்ல முறையில் சாலை பணிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டு 200க்கும் மேற்பட்ட பகுதிகளில் புதிய தார் சாலைப்பணிகள் நடைபெற்று வருகின்றன. 2023க்குள் முழுமையான பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சியில் முத்துநகர் என்று அழைக்கப்படும் தூத்துக்குடி மாநகராட்சி தனித்துவம் உள்ள இடமாக இருக்கும் அதனை கருத்தில் கொண்டு அனைவரும் பணியாற்றி வருகிறோம். செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 10-ம் தேதிக்குள் இப்பணிகள் முடிவுறும் அதுவரையில் நமது தூத்துக்குடி மாநகராட்சியின் தரத்தை மேம்படுத்துவற்கான இப்பணிகளால் பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் குறுகியகால சிரமத்தை பொறுத்துக் கொள்ளுமாறு மேயர் ஜெகன் பெரியசாமி கேட்டுக்கொண்டார்.
ஆய்வின் போது பகுதி செயலாளர் ரவீந்திரன், மாநகராட்சி மண்டல தலைவர் நிர்மல்ராஜ், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், முன்னாள் கவுன்சிலர் ரவீந்திரன், மற்றும் ஜோஸ்பர், பிரபாகர், உள்பட பலர் கலந்து கொண்டனர்

