தூத்துக்குடி
அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் தனது திருமணநாளை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமியை சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்தும் ஆசியும் பெற்றார்.
வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச்செயலாளர் கௌதம்பாண்டியன், போக்குவரத்து தொழிற்சங்க முன்னாள் துணைச்செயலளார் சங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

