தூத்துக்குடி
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வரும் 8ம் தேதி வெள்ளிக்கிழமை திமுக துணை பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி காலை 9 மணியளவில் தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் தேசிய அளவிலான கடல் சருக்கு விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தல். 11 மணியளவில் கோவில்பட்டி வெங்கடசாமி நாயுடு கல்லூரியில் மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி. மாலை 4.30 மணியளவில் சோழபுரத்தில் மக்கள் களம் நிகழ்ச்சி மூலம் பொதுமக்களிடம் குறை கேட்டல். 5.15 மணியளவில் கன்னக்கட்டை கிராமத்தில் மக்கள் களம் நிகழ்ச்சி மூலம் பொதுமக்களிடம் குறை கேட்டல். 6 மணிக்கு புங்கவர்நத்தம் கிராமத்தில் மக்கள் களம் நிகழ்ச்சி மூலம் பொதுமக்களிடம் குறை கேட்டல். 6.45 போடுபட்டி கிராமத்தில் மக்கள் களம் நிகழ்ச்சி மூலம் பொதுமக்களிடம் குறை கேட்டல். இரவு 7.30 மணியவில் டி.சண்முகபுரம் கிராமத்தில் மக்கள் களம் நிகழ்ச்சி மூலம் பொதுமக்களிடம் குறை கேட்டல், ஆகிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.

அந்தந்த பகுதியில் உள்ள ஒன்றிய, பேரூர், ஊராட்சி, கிளை கழக செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

