தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் உட்கோட்டத்தில் இரவு வாகன தணிக்கையை தீவிரப்படுத்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவிட்டத்தின் பேரில் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் அவர்கள் மேற்பார்வையில் விளாத்திகுளம் உட்கோட்டத்தில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாகன தணிக்கை செய்தார்கள்.
அப்பொழுது புதூரில் இருந்து மதுரை நோக்கி வேகமாக சென்ற TN65 C 2527 Bollero pickup என்ற வாகனம் நிலைதடுமாறி ரோட்டில் இருந்து கீழே இறங்கி விபத்துக்குள்ளானது. உடனடியாக இரவு ரோந்து தலைமை காவலர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அந்த வாகனத்தில் மேற்பகுதியில் தவிடு மூட்டைகளும் அடியில் ரேஷன் அரிசி 48 மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. உடனடியாக அந்த வண்டியையும் அரிசி மூட்டைகளையும் மேலும் அந்த வண்டியில் இருந்த மூன்று நபர்களையும் காவல் நிலையத்திற்கு அழைத்துவந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திறமையாக பணிசெய்த புதூர் இரவு ரோந்து தலைமை காவலர் மாடசாமி மற்றும் காவலர்களை விளாத்திகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் வெகுவாக பாராட்டினார்கள்.


