சிவகங்கை மாவட்டம் மானமதுரை அருகே கள்ளக்காதலியையும், கள்ளக்காதலனையும், கொலை செய்த பெண்ணின் கணவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். கள்ளக்காதலன் வேல்ராஜை திருச்சியிலும், அவரது காதலி வளர்மதியை சொந்த ஊரான களங்காட்டூரிலும் அவரது உறவினர்கள் கொடூரமாக செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே களங்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வளர்மதி (22), இவருக்கும் ராமநாதபுரம் மாவட்டம் நயினார் கோயில் மணச்சனேந்தலை சேர்ந்த சந்தியேந்திரனுக்கும் 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 6 வயதில் மகள், 3 வயதில் மகன் உள்ளனர்.
இந்நிலையில் மணச்சனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த வேல்ராஜ் (20) என்பவருடன் வளர்மதிக்கு பழக்கம் ஏற்பட்டது. இதனால் கடந்த 24ம் தேதி வளர்மதி வேல்ராஜூடன் வீட்டை விட்டு ஓடிப்போனார். வளர்மதி காணாமல் போனது குறித்து நயினார் கோவில் போலீசாரிடம் கணவர் புகார் அளித்தார். இதன் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் வளர்மதியை தேடி வந்தனர். ஊருக்கு வருமாறு அழைப்பு இந்நிலையில் வேல்ராஜ் வளர்மதியுடன் திருச்சியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியது தெரியவந்தது. இருவரும் இருக்கும் இடம் தெரிந்ததும் வளர்மதியின் கணவர் சத்தியேந்திரன், அவரது தம்பி பிரபு, வளர்மதியின் அண்ணன் ராசையா(எ) மணிகண்டன், காட்டு ராஜா, தனசேகர் ஆகியோர் திருச்சி சென்று வளர்மதியை சொந்த ஊருக்க வருமாறு கூறியுள்ளனர். கணவர் கைது இதில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது வேல்ராஜை வளர்மதியின் உறவினர்கள் தாக்கிவிட்டு வளர்மதியை களங்காட்டூர் கிராமத்திற்கு அழைத்து வந்தனர். காயம் அடைந்த வேல்ராஜ் திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வளர்மதியின் கணவர் சத்தியேந்திரன், அவரது தம்பி பிரபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் காயம் அடைந்த வேல்ராஜ் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த வளர்மதியின் உறவினர்களான காட்டுராஜா, தனசேகர் ஆகிய இருவரும் நேற்று முன்தினம் இரவு, உன்னால் தான் எங்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று கூறி வளர்ம்தியை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். இதையடுத்து மானாமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து களங்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த தனசேகர் (26), காட்டுராஜா(26) ஆகியோரை கைது செய்தனர்.


