• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில்     எழுச்சிமிகு வரவேற்பு: நெகிழ்ச்சி அடைந்த உதயநிதி ஸ்டாலின்!!! அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞரணி துணை செயலாளர் ஜோயல் மிக பிரம்மாண்டமான வரவேற்பு கொடுத்து வெள்ளி செங்கோல் அளித்தார்.

policeseithitv by policeseithitv
September 5, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில்      எழுச்சிமிகு வரவேற்பு: நெகிழ்ச்சி அடைந்த உதயநிதி ஸ்டாலின்!!!  அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞரணி துணை செயலாளர் ஜோயல் மிக பிரம்மாண்டமான வரவேற்பு கொடுத்து வெள்ளி செங்கோல் அளித்தார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடியில்

எழுச்சிமிகு வரவேற்பு: நெகிழ்ச்சி அடைந்த உதயநிதி ஸ்டாலின்!!!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞரணி துணை செயலாளர் ஜோயல் மிக பிரம்மாண்டமான வரவேற்பு கொடுத்து வெள்ளி செங்கோல் அளித்தார்.

 

தூத்துக்குடி, செப்,5.

 

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் நேற்று (4ம் தேதி) இரவு தூத்துக்குடி வடக்கு, தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில் இளைஞரணி மாநில செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அதற்காக நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் அவர் தூத்துக்குடி வந்தார். அங்கு அவருக்கு அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், வக்கீல் ஜோயல் ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு 100 அடி உயரமுள்ள பிரமாண்ட கலைஞர் நூற்றாண்டு நினைவு கொடி கம்பம் புதுக்கோட்டையில் உள்ள மாநில இளைஞரணி துணைச் செயலாளரான தூத்துக்குடி ஜோயல் ஏற்பாட்டில் அவரது வீட்டின் முன்பு நிறுவப்பட்டுள்ளது. அதனை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திமுக கொடியினை ஏற்றி வைத்தார். அதனைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடன் நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்று, அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் பின்னர் மாலை தூத்துக்குடி- திருச்செந்தூர் ரோட்டில் அமைந்துள்ள மாணிக்கம் மஹாலில் ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்ட திமுக சார்பில் கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று, திமுக தொண்டர்களுக்கு பொற்கிழி வழங்கினார். அதனைத்தொடர்ந்து இரவு புதுக்கோட்டை, சூசைபாண்டியாபுரத்தில் நடைபெற்ற ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்ட திமுக இளைஞரணி செயல்வீரர்கள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார் மாநில திமுக இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சரான பின்பு தூத்துக்குடிக்கு முதன் முதலாக வந்தார் என்பதனால், அவரை வரவேற்க மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தூத்துக்குடி ஜோயல்

சார்பில் மிக பிரமாண்ட வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்திலிருந்து உதயநிதி ஸ்டாலின் தலைமை நடைபெற்ற நிகழ்ச்சிகள் நடைபெறும் அனைத்து இடங்களிலும் ஜோயல் வரவேற்பு டிஜிட்டல் பேனர்களும், லித்தோ வால் போஸ்டர்கள், திரும்பிய பக்கமெல்லாம் கழக கொடி என அசத்திய ஜோயல் இளைஞர் அணி பாண்டவர்களை வெள்ளை சட்டை வெள்ளை பேண்ட் அணிய சொல்லி உதயநிதி ஸ்டாலினுக்கு கம்பீர வரவேற்பு கொடுத்தார். சுமார் 50-க்கும் மேற்பட்ட கார்களில் விமான நிலையத்திலிருந்து உற்சாக வரவேற்பு கொடுத்த ஜோயல் கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு 100 அடி உயரமுள்ள பிரமாண்ட கலைஞர் நூற்றாண்டு நினைவு கொடி கம்பம் அமைத்து அதனை உதயநிதி ஸ்டாலின் கரங்களால் கொடியேற்றி வைத்த நிகழ்வு தூத்துக்குடி மாவட்ட திமுக இளைஞர் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியும், எழுச்சியும் ஏற்படுத்தியது.

உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞரணி துணை செயலாளர் ஜோயல் பிரம்மாண்டமான வரவேற்பு கொடுத்து மட்டுமல்லாமல் நினைவு பரிசாக அவருக்கு வெள்ளி செங்கோல் அளித்தார். அமைச்சராக பொறுப்பேற்று முதன்முதலாக

தூத்துக்குடி வருகை தந்த உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக இளைஞர் அணியினர் மற்றும் தொண்டர்கள், மற்றும் ஜோயல் செய்த பல்வேறு அசத்தல் வரவேற்பு ஏற்பாடுகள் அமைச்சர் உதயநிதிக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்றது தூத்துக்குடி மாவட்ட திமுக தொண்டர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. உங்க மகிழ்ச்சியான தருணத்தை வெளிப்படுத்தும் வகையில்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட ‘டுவிட்டர்’ பதிவில் கூறியிருப்பதாவது:-

 

துறைமுக நகராம் தூத்துக்குடியின் புதுக்கோட்டை நல்லமலை பகுதியில் தி.மு.க. இளைஞர் அணியின் மாநில துணை செயலாளர் சகோதரர் எஸ்.ஜோயலின் இல்லத்துக்கு அருகே அவரது ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி 100 அடி உயர கொடிக்கம்பத்தில் மாநில சுயாட்சியின் அடையாளமாக திகழும் தி.மு.க.வின் இருவண்ண கொடியை ஏற்றி வைத்தோம்.

திரளாக திரண்டு ஆரவாரமிக்க வரவேற்பு தந்த தி.மு.க. இளைஞரணியினர், பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு அன்பும், நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

Previous Post

தூத்துக்குடிக்கு வருகை தரும் உதயநிதி ஸ்டாலின் : வரலாறு காணாத வரவேற்பு கொடுக்க தூத்துக்குடி ஜோயல் செய்த அசத்தல் ஏற்பாட்டால் திமுகவினர் படுகுஷி!!” ஜோயல் ஏற்பாட்டில்   100 அடி உயர கழக கொடியேற்றுகிறார் உதயநிதி!!

Next Post

செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரனார் பிறந்தநாள்.. திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி!!

Next Post
செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரனார் பிறந்தநாள்.. திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி!!

செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரனார் பிறந்தநாள்.. திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி!!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In