• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடிக்கு வருகை தரும் உதயநிதி ஸ்டாலின் : வரலாறு காணாத வரவேற்பு கொடுக்க தூத்துக்குடி ஜோயல் செய்த அசத்தல் ஏற்பாட்டால் திமுகவினர் படுகுஷி!!” ஜோயல் ஏற்பாட்டில்   100 அடி உயர கழக கொடியேற்றுகிறார் உதயநிதி!!

policeseithitv by policeseithitv
September 4, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடிக்கு வருகை தரும் உதயநிதி ஸ்டாலின் : வரலாறு காணாத வரவேற்பு கொடுக்க தூத்துக்குடி ஜோயல் செய்த அசத்தல் ஏற்பாட்டால் திமுகவினர் படுகுஷி!!” ஜோயல் ஏற்பாட்டில்    100 அடி உயர கழக கொடியேற்றுகிறார் உதயநிதி!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி, செப்,3.

 

தூத்துக்குடிக்கு வருகை தரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்பதற்கு விமான நிலையத்தில் ஆரம்பித்து தூத்துக்குடி மாநகர் வரை எங்கு பார்த்தாலும் கழக கொடி, டிஜிட்டல் பேனர், வால் போஸ்ட், சுவர் விளம்பரம்

மற்றும் உதயநிதி பங்கேற்கும் பல்வேறு இடங்களில்

உற்சாகமாக வரவேற்பு கொடுக்க அசத்தல் ஏற்பாடுகளை வழக்கறிஞர் தூத்துக்குடி ஜோயல் மிகப் பிரம்மாண்டமாக செய்துள்ளார். இதற்கான ஆயத்தப் பணியை கடந்த ஒரு வாரமாக ஜோயல் இரவு பகல் என்று வராமல் செய்து வருகிறார் இதனால் தூத்துக்குடி திமுகவினர் படு குஷி அடைந்துள்ளனர்.தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக திமுக மாநில இளைஞரணிச் செயலரும் தமிழக இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நாளை 4ஆம் தேதி தூத்துக்குடி வருகிறாா்.

அமைச்சா் உதயநிதி ஸ்டாலின், தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கொள்வதற்காக தூத்துக்குடி வருகிறாா். மாலை 3 மணிக்கு விமானம் மூலம் தூத்துக்குடி வரும் அவருக்கு விமான நிலையத்தில் தூத்துக்குடி திமுக சாா்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. அதன் பின்னா், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அனைத்துத் துறை அலுவலா்களுடனான கூட்டம் மாலை 3.30 மணிக்கு நடைபெறும். பின்னா், மாலை 4.30 மணிக்கு, தூத்துக்குடி தனியாா் மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் மாவட்டத்தில் உள்ள கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கி பேசுகிறாா். மாலை 5.30 மணிக்கு, புதுக்கோட்டை பிரதானச் சாலை அருகே நடைபெறும் இளைஞரணி செயல்வீரா்கள் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறாா். பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக தூத்துக்குடிக்கு வருகை தரும் அமைச்சர் உதயநிதிக்கு மிக பிரம்மாண்டமான முறையில் உற்சாக வரவேற்பு கொடுக்கும் விதமாக வழக்கறிஞர் தூத்துக்குடி ஜோயல் பல்வேறு அசத்தல் ஏற்பாடுகளை செய்து வருகிறார். இதனால் தூத்துக்குடி திமுகவினர் படு குஷியாக உள்ளனர். உதயநிதி ஸ்டாலின்

தி.மு.க இளைஞரணியின் சார்பில் தமிழகம் முழுவதும் `இல்லம்தோறும் உறுப்பினர்கள்’ சேர்க்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைப்பதற்காக கடந்த ஆண்டு நவம்பர் 20 அன்று தூத்துக்குடி வந்தார். அவரை வரவேற்பதற்காக தூத்துக்குடி ஜோயல் ஒரு வார காலமாக தூத்துக்குடியில் தங்கி பல்வேறு முன்னேற்பாடுகள் செய்து மிக பிரம்மாண்டமான வரவேற்பு கொடுத்து அசத்தினார்.

உதயநிதி ஸ்டாலின் வருகையின் போது இளைஞர்களை

வெள்ளை சட்டை, வெள்ளை பேண்ட், அணிய செய்து இளைஞர்கள் மற்றும்

தூத்துக்குடி மாவட்ட திமுகவினர் அனைவரையும் ஒருங்கிணைத்தது

திமுகவினர் மிகுந்த உற்சாகத்தில்

காணப்பட்டனர்.

உதயநிதி ஸ்டாலின் வருகையின் போது

யாரும் எதிர்பார்க்காத வகையில் நாட்டுப்புற கலைக்குழுவின் ஆட்டம் பாட்டம், டிரம்ஸ் குழுவினரின் இசை முழக்கத்திற்கு நடுவில் தி.மு.க மாநில இளைஞரணி துணைச்செயலாளரான தூத்துக்குடி ஜோயல், என்ட்ரி கொடுத்து நடந்து வந்தார். சுமார் 1 மணி நேரம் விமான நிலைய வளாகமே டிரம்ஸ் சத்தத்தால் அமர்க்களமானது. தூத்துக்குடி மாவட்ட திமுகவினர் அனைவரையும் இந்த நிகழ்வு உற்சாகத்தில் ஆழ்த்தியது, தூத்துக்குடி ஜோயல் அசத்தல் ஏற்பாட்டை அந்த சமயம் உதயநிதி ஸ்டாலின் மனதார பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நாளை பல்வேறு

நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வருகை தரும்

உதயநிதி ஸ்டாலினுக்கு

வரலாறு காணாத வரவேற்பு கொடுக்கும் வகையில் பல்வேறு அசத்தல் ஏற்பாடுகளை

செய்து வருகிறார் தூத்துக்குடி ஜோயல் தூத்துக்குடி விமான நிலையத்தில்

உற்சாக வரவேற்பு கொடுப்பதற்காக டிரம்ஸ் ஏற்பாடுகள், இளைஞர் அணியினர் வெள்ளை உடைகள் அணிந்து இளைஞர்கள் அணிவகுக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார் . இதனால் இளைஞர் அணி பட்டாளம் விமான நிலையத்தில்

உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர். அதுபோல் அன்றைய தினம் இரவு புதுக்கோட்டையில் நடைபெறும்

கூட்டத்திற்கு

திமுக இளைஞர் அணி சுமார் ஐந்தாயிரம் பேருக்கு மேல்

வெள்ளை சட்டை,வெள்ளை பேண்ட் , அணிந்து கூட்டத்தில் பங்கே இருக்கிறார்கள்

இதற்கான ஏற்பாட்டை ஜோயல் கடந்த ஒரு வார காலமாக பல்வேறு வியூகங்கள் வகுத்து சிறப்பான வரவேற்பு ஏற்பாடு செய்து வருகிறார். தூத்துக்குடி புதுக்கோட்டை பாலம் அருகே வழக்கறிஞர் தூத்துக்குடி ஜோயல் கட்டியுள்ள மிக பிரமாண்டமான

அவரது இல்லத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தருகிறார். ஜோயல் வீட்டு வாசலில் சுமார் 100 அடி உயரமுள்ள கருப்பு சிவப்பு கழக கொடியை

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியேற்றி வைக்கிறார். தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து சிறப்பான வரவேற்பு கொடுத்து அதன் பிறகு புதுக்கோட்டை கொடியேற்று விழா அதனை தொடர்ந்து கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி, இரவு புதுக்கோட்டையில் கூட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுவதால் தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி மாநகர பகுதியில் உள்ள

விழா நடைபெறும் திருமண மண்டபம் வரை

சாலைகளின் இருவரங்களிலும் கழக கொடி, டிஜிட்டல் பேனர் வால் போஸ்ட் என அமைச்சர் உதயநிதி வரவேற்பு விதமாக தூத்துக்குடி ஜோயல் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்து அசத்தி வருகிறார். இது மட்டுமல்லாமல் திமுக தொண்டர்களை சந்தித்து அமைச்சர் உதயநிதி நிகழ்ச்சிகளுக்கு குடும்பத்துடன் வரவேண்டும் என்று நல்ல ஆலோசனை வழங்கி அசத்தி வருகிறார். நாளை தூத்துக்குடிக்கு

வருகை தரும்

அமைச்சர் உதயநிதியை வரவேற்கும் வகையில் வழக்கறிஞர் தூத்துக்குடி ஜோயல் செய்த மிக பிரம்மாண்டமான அசத்தல் வரவேற்பு ஏற்பாடுகள் மூலம் தூத்துக்குடியை விழா கோலம் பூண்டது. திமுக தலைமையின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் தூத்துக்குடி ஜோயல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போர்ப்படை தளபதியாக விளங்குவதோடு மட்டுமல்லாமல்

தூத்துக்குடியில் கட்சிப் பணிகளில் ஈடுபடும்போது

இவரது செயல்கள் திமுகவால் பாராட்டப்படுவதும் அதே நேரத்தில் திமுக தொண்டர்கள் உற்சாக படும் வகையில் அமைவது வழக்கம்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு தூத்துக்குடியில் வெகு சிறப்பாக கொண்டாடிய ஜோயல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆட்டோக்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில்

வாழ்த்து ஸ்டிக்கர்கள் ஒட்டி அசத்தினாள். அதுபோல் திமுக இளைஞரணியின் சார்பில் தமிழகம் முழுவதும் இல்லந்தோறும் உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி வருகை தந்த உதயநிதியை வரவேற்கும் வகையில் இவர் செய்த ஏற்பாடு திமுக தலைமையால் பாராட்டப்பட்டார்.

திமுக கூட்டணி கட்சியினர்களையும் அரவணைத்து அன்பாக பழக கூடியவர் வழக்கறிஞர் ஜோயல் உதாரணத்திற்கு
தூத்துக்குடி மத்திய மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளராக புதியதாக பொறுப்பேற்றுள்ஆட்டோ கணேசன் புதிய மாவட்டச் செயலாளராக பொறுப்பேற்ற உடன் தனது கட்சி நிர்வாகிகளுடன்
ஜோயல் அவர்களை மரியாதை நிமர்த்தமாக சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டனர். திமுக தொண்டர்கள் மற்றும் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகளிடம் அன்பாக பழகக் கூடியவர் வழக்கறிஞர் ஜோயல் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகளும் தூத்துக்குடியில் திமுகவுடன் இணைந்து செயல்படுகின்றன அவர்களுக்கும் உரிய ஒத்துழைப்பு நல்கி அனைவரையும் அரவணைத்து பணியாற்றி
வருகிறார் ஜோயல் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அதுபோல் நாளை நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிக்கு வருகை தரும்

உதயநிதிக்கு

வரவேற்பு அளிப்பதில் தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்டங்களுக்கு முன்னுதாரணமாக பல்வேறு அசத்தல் வரவேற்பு ஏற்பாடுகளை ஜோயல் செய்துள்ளார். இதனால் தூத்துக்குடி விழாக்கோலம் பூண்டது. நகரில் எங்கு பார்த்தாலும் தமிழக முதல்வரின் திட்டங்கள், அடங்கிய பேனர்கள் வால் போஸ்டர்கள், கழகக் கொடிகள் என ஜொலிக்கிறது. இதனால் தூத்துக்குடி திமுகவினர் ஏக குஷியில் இருக்கின்றனர்.

தூத்துக்குடி ஜோயல் எந்த நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்தாலும் அதில் ஒரு புதுமையை செய்வார் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக

நாளை நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியும் ஒரு வரலாற்று சிறப்புமிக்க வரவேற்பு நிகழ்ச்சியாக அமையும் என்பதில் சிறிதும் ஐயமில்லை

செய்தி தொகுப்பு :ஆத்திமுத்து

Previous Post

தூத்துக்குடியில் கொட்டும் மழையில் மேயர் ஜெகன் பெரியசாமி பல்வேறு பகுதிகளில் ஆய்வு

Next Post

தூத்துக்குடியில்     எழுச்சிமிகு வரவேற்பு: நெகிழ்ச்சி அடைந்த உதயநிதி ஸ்டாலின்!!! அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞரணி துணை செயலாளர் ஜோயல் மிக பிரம்மாண்டமான வரவேற்பு கொடுத்து வெள்ளி செங்கோல் அளித்தார்.

Next Post
தூத்துக்குடியில்      எழுச்சிமிகு வரவேற்பு: நெகிழ்ச்சி அடைந்த உதயநிதி ஸ்டாலின்!!!  அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞரணி துணை செயலாளர் ஜோயல் மிக பிரம்மாண்டமான வரவேற்பு கொடுத்து வெள்ளி செங்கோல் அளித்தார்.

தூத்துக்குடியில்     எழுச்சிமிகு வரவேற்பு: நெகிழ்ச்சி அடைந்த உதயநிதி ஸ்டாலின்!!! அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞரணி துணை செயலாளர் ஜோயல் மிக பிரம்மாண்டமான வரவேற்பு கொடுத்து வெள்ளி செங்கோல் அளித்தார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In