தூத்துக்குடி
அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை படி சுதந்திர போராட்டத்திற்கு முதல் முழக்க மிட்ட மாமன்னர் புலித்தேவரின் 308வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி பழைய பேருந்துநிலையம் அருகேயுள்ள அருள்மிகு சிவனடி சாஸ்தா திருக்கோவில் வளாகத்தில் உள்ள புலித்தேவரின் திருவுருவ சிலைக்கு ஓபிஎஸ் அணியின் மாநகர் மாவட்ட செயலாளர் ஏசாதுரை, தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினார்கள்.
விழாவில்; மாநகர் மாவட்ட அவைத்தலைவர் மாடசாமி, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர்கள் மந்திரம், மாரியப்பன், அண்ணா தொழிற்சங்க துணைச்செயலாளர் சோலையப்பன், இலக்கிய அணி செயலாளர் தர்மசீலன், ஜெ பேரவை இணைச்செயலாளர் ஜீவா, மகளிர் அணி செயலாளர் சித்ரா, ஜெ பேரவை துணைச்செயலாளர்கள் ராஜதுரை, ஆறுமுகம், முத்துபட்டன், கனிஷ்டன், சட்டமன்ற தொகுதி இணைச்செயலாளர் ஜெயராமன், பகுதி செயலாளர்கள் லோகு கணேசன், செல்லத்துரை, இலக்கிய அணி இணைச்செயலாளர் சிவசூரியன், ஜெ பேரவை இணைச்செயலாளர் ஆறுமுகம், மகளிர் அணி இணைச்செயலாளர்கள் சாந்தி, தேன்மொழி சிவஞானம், எம்.ஜி.ஆர் இளைஞர் அணி இணைச்செயலாளர் சுதாகர், பகுதி எம்.ஜி,ஆர் மன்ற இணைச்செயலாளர் கண்ணன், தொழிற்சங்க துணைச்செயலாளர் வேல்மணி, சிறுபான்மைபிரிவு தலைவர் இக்பால்பாட்ஷா, பொருளாளர் அப்துல்லாஹாசன், நிர்வாகிகள் ஷேக்முகம்மது, சின்னத்தம்பி, முத்துமரைக்காயர், சுபிக்குமார், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

