தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்பணிகளை சூழற்சி முறையில் தினந்தோறும் பார்வையிட்டு புதிய பணிகளை முறையாக முறைப்படுத்தி விரைவாக செய்திடவும் கழிவு நீர் நீரேற்று நிலையம் பகுதிகளில் முறையாக பாராமரிக்கப்பட்டு வருகிறதா? என பல்வேறு துறை அலுவலர்களுடன் சென்று பொதுமக்களின் நலன் கருதி நடைபெறுகின்றன.
இந்நிலையில் பெருமாள்புரம் பகுதியில் அமைந்துள்ள நுண் உரமாக்கம் மையம் மற்றும் துணை கழிவு நீரேற்று நிலையம் ஆகியவற்றை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார். வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், மற்றும் ஜோஸ்பர், உள்பட பலர் உடனிருந்தனர்.

