தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி தாளமுத்துநகர் வடபாகம் அழகு முத்துநகர் முத்துவிநாயகர் முத்துமாரியம்மன் கோவில் 28ம் ஆண்டு கொடைவிழாவை முன்னிட்டு கடந்த 25ம் தேதி கனபதி ஹோமத்துடன் கால்நட்டு விழா நடைபெற்று தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று மதிய கொடைக்கு பின் நடைபெற்ற அன்னதானத்தை மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளருமான சரவணக்குமார் தொடங்கி வைத்து சமபந்தி அன்னதானம் அருந்தினார்.
விழாவில் ஓன்றிய கவுன்சிலர் தொம்மை சேவியர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கபாண்டி, தங்கமாரிமுத்து, கோவில் தலைவர் மாரியப்பன், செயலாளர் பழனி, பொருளாளர் இசக்கியப்பன், மக்கள் நீதிமய்யம் வட்ட செயலாளர் சந்தனம், உள்பட பக்தர்கள் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

