சென்னை,
திமுக தலைவராக ஆறாம் ஆண்டு தொடங்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு
சென்னை – அண்ணா அறிவாலயத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக 5 ஆண்டுகளை நிறைவு செய்து 6வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, அவரது சகோதரியும்,
திமுக துணைப் பொதுச் செயலாளர்
திமுக எம்.பியுமான கனிமொழி வாழ்த்து தெரிவித்து
2017 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து திமுக கட்சியின் செயல் தலைவராக பதவி வகித்து வந்த மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி மறைந்த பிறகு, 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28 ஆம் தேதி தி.மு.கவின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற 15வது உட்கட்சித் தேர்தலில் மீண்டும் 2வது முறையாக திமுக தலைவராக போட்டியின்றி தேர்வானார். தொடர்ந்து கழகத்தின் தலைவராக 5 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் மு.க.ஸ்டாலின், நேற்று 6வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். இதனையொட்டி திமுகவினர் அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் திமுக எம்.பியும், அவரது சகோதரியுமான கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில், “பேரறிஞர் அண்ணாவும் தலைவர் கலைஞரும் கட்டிக்காத்த நம் தி.மு.கழகத்தின் தலைவராக ஐந்தாண்டுகள் சிறப்புற பணியாற்றி, ஆறாம் ஆண்டு அடியெடுத்து வைக்கும் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என் வாழ்த்துகள். இந்திய ஜனநாயகம் கடும் நெருக்கடியைச் சந்தித்து வரும் வேளையில், ஒன்றுபட்ட இந்தியாவை மீட்டெடுக்கும் அவரது அரசியல் பணிகள் நமக்கு எழுச்சியூட்டுகின்றன.” என்று குறிப்பிட்டுள்ளார்.

