தூத்துக்குடி
ரக்ஷா பந்தன் என்பது, ஆவணி மாதப் பௌர்ணமி நாளில் கொண்டாடப்படும் பண்டிகையாகும். பெண்கள் தமது சகோதரர்கள், மற்றும் சகோதரர்களாகக் கருதுவோரின் மணிக்கட்டில் மஞ்சள் நூல் கட்டுவது இப்பண்டிகையின் முக்கிய நிகழ்ச்சி. இதனை ஏற்றுக் கொள்வதன் மூலம் ஓர் ஆண், அந்தச் சகோதரியின் பாதுகாப்பிற்கும், வாழ்க்கை நலத்திற்கும் உறுதுணையாக இருப்பேன் என்று உறுதி கூறுவதாகக் கருதப்படுகிறது. ராக்கி கட்டியவுடன் சகோதரன், அந்த அன்புச் சகோதரிக்கு ஒரு பரிசு (அல்லது பணம்) அளிப்பது வழக்கம். அடிப்படையில் இந்துக்களால் கொண்டாடப்படும் இப்பண்டிகையை மதப் பணடிகை என்பதை விட சமுதாயப் பண்டிகை என்று கூறுவது பொருந்தும்.
வட இந்தியாவில் பிரபலமாக உள்ள இந்த நிகழ்ச்சி தற்போது தென்னிந்தியாவிலும் பிரபலமாகி வருகிறது.
இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி, துணை மேயர் ஜெனிட்டா ஆகியோருக்கு தூத்துக்குடி ஓம் சாந்தி தியான மண்டப பிரம்மா குமாரிகள் பொறுப்பாளர் அருணா சகோதரி ரக்ஷா பந்தன் கயிறு கட்டினார்.
அதனை தொடர்ந்து மாநகராட்சி மண்டல தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, கலைச்செல்வி, அன்னலெட்சுமி, நிர்மல்ராஜ், கவுன்சிலர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், ராமகிருஷ்ணன், சுரேஷ்குமார், ரெங்கசாமி, சரவணக்குமார், தெய்வேந்திரன், இசக்கிராஜா, கண்ணன், ராமர், வைதேகி, நாகேஸ்வரி, ஜெயசீலி, மரியகீதா, அந்தோணி பிரகாஷ்மார்ஷல், ராஜேந்திரன், விஜயகுமார், பவாணி மார்ஷல், பொன்னப்பன், ராஜதுரை, முத்துவேல், பேபி ஏஞ்சலின், மெட்டில்டா, அதிஷ்டமணி, ரெங்கசாமி, ஜான்சிராணி, ஜாக்குலின்ஜெயா, ரிக்டா, ராமுத்தம்மாள், ஜான், காந்திமதி, மந்திரமூர்த்தி, பாப்பாத்தி, சுயம்பு, பட்சிராஜ், கற்பககனி, சந்திரபோஸ், விஜயலட்சுமி, கந்தசாமி, ரெக்ஸின், மும்தாஜ், சுப்புலட்சுமி மற்றும் செய்தியாளர் சண்முகசுந்தரம் உள்பட பல செய்தியாளர்கள் ரக்ஷா பந்தன் கயிறு கட்டி சகோதரத்துவத்தை வெளிப்படுத்தினார்கள்.

