• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

மனம் போன போக்கில் பேசும் பிஜேபி அரசை வீழ்த்தும் வரை அனைவரும் தீவிரமாக பணியாற்ற வேண்டும் – வடக்கு மாவட்ட திமுக கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

policeseithitv by policeseithitv
August 30, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
மனம் போன போக்கில் பேசும் பிஜேபி அரசை வீழ்த்தும் வரை அனைவரும் தீவிரமாக பணியாற்ற வேண்டும் – வடக்கு மாவட்ட திமுக கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் தலைமையில் மார்கன்டேயன் எம்.எல்.ஏ. மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மேயர் ஜெகன் பெரியசாமி, ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் எந்த பணியுமே முறையாக நடைபெறாமல் இருந்தது. நம்முடைய தலைவர் தளபதியார் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் இந்த நாட்டின் வளர்ச்சிக்கு 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் உழைத்து கொண்டிருக்கிறார். திட்டங்களை அறிவிப்பது மட்டுமின்றி அது முறையாக மக்களை சென்றடைகிறதா என்று அதிகாரிகள் அளவில் மட்டுமின்றி பல மாவட்டங்களுக்கும் சென்று கூட்டங்கள் நடத்தி ஆய்வுகளை மேற்கொள்கிறார். அனைத்து தரப்பினரின் நலன் காக்கும் அரசாக இருந்து வருகிறது. செய்த சாதனைகள் ஏராளம் இதை அனைத்து தரப்பினர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

பெரியார் வழியில் அண்ணா, கலைஞர், செய்த திட்;டங்கள் சாதனைகள் ஏராளம்; தலைவர் கலைஞர் வழியில் தேசிய அளவில் உள்ள கட்சி தலைவர்களிடம் நட்புறவு கொண்டு 2024ல் நடைபெறவுள்ள தேர்தலில் யார் வரவேண்டும். யார் வரக்கூடாது. என்பதில் கவனமாக இருக்க வேண்டும். என்பதை எடுத்துக் கூறி ஒருமித்த கருத்துகளுடன் இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. அந்த கூட்டணி அமைவதற்கு காரணமாக இருந்த நமது தளபதியாரை பிஜேபி கட்சியினரும் பிரதமர் மோடியும் தேவையில்லாத கருத்துக்களை எல்லாம் கூறி வருகின்றனர். மணம் போன போக்கில் பேசும் பிஜேபி அரசை வீழ்த்தும் வரை அனைவரும் தீவிரமாக பணியாற்ற வேண்டும். நாட்டு மக்களுக்கு நன்மை செய்பவர் யார் என்று மக்களுக்கு தெரியும் நாம் செய்ய வேண்டியது. திமுக ஆட்சி அமைந்த பின் செய்த சாதனைகளை சிறு கிராமங்கள் முதல் பெரிய நகரங்கள் வரை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். அனைவருடைய நலனிலும் அக்கறை கொண்டு திராவிட மாடல் ஆட்சி நடைபெறுகிறது. வரும் 4ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தரும் மாநில இளைஞர் அணி செயலாளரும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் அன்றைய தினம் கழக முன்னோடிகளுக்கு பொற்கிளி வழங்கும் நிகழ்ச்சியும் சேலத்தில் நடைபெறவுள்ள திமுக இளைஞர் அணி எழுச்சி மாநாட்டிற்கு ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து இளைஞர் அணி கூட்டத்திலும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார். அனைத்து அணியை சார்ந்த நிர்வாகிகளும் ஒன்றிய நகர பேரூர் கிளைக் கழக வட்டக் கழக செயலாளர்கள் அதிக அளவில் கலந்து கொள்வது மட்டுமின்றி இளைஞர் அணியினர் ஒவ்வொரு பகுதியிலிருந்து அதிக அளவில் கலந்து கொள்ள வேண்டும். அதன் மூலம் 2024ல் நடைபெறுவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கு தளபதியார் வழியில் நாமும் ஓற்றுமையுடன் உழைக்க வேண்டும் என்று பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட துணைச்செயலாளர்கள் ஆறுமுகம், ராஜ்மோகன் செல்வின், ஏஞ்சலா, பொருளாளர் ரவீந்திரன், துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூரிதங்கம், இராஜா, தலைமை செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, ஒன்றிய செயலாளர்கள்;, முருகேசன், சின்னப்பாண்டியன், ராதாகிருஷ்ணன், காசிவிஸ்வநாதன், மும்மூர்த்தி, செல்வராஜ், சின்னமாரிமுத்து, நவநீதகண்ணன், அன்புராஜன், ராமசுப்பு, சுப்பிரமணியன், மாவட்ட அணி அமைப்பாளர்கள் அந்தோணி ஸ்டாலின், மதியழகன், அன்பழகன், குபேர்இளம்பரிதி, கவிதாதேவி, அபிராமிநாதன், வக்கீல் பாலகுருசாமி, துணை அமைப்பாளர்கள் பிரதீப், நாகராஜன், ஜோசப் அமல்ராஜ், பிரபு, அந்தோணிகண்ணன், கோகுல்நாத், பார்வதி, பெனில்டஸ், பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், ரவீந்திரன், நிர்மல்ராஜ், மேகநாதன், ஜெயக்குமார், ராமகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதிகள் சேர்மபாண்டியன், செந்தில்குமார், நாராயணன், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், மாநகர அணி அமைப்பாளர்கள் ஜீவன் ஜேக்கப், அருண்சுந்தர், முருகஇசக்கி, ஜெயக்கனி, துணை அமைப்பாளர்கள் சங்கரநாராயணன், ரவி, பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் சூர்யா, மற்றும் கருணா, அல்பட், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

தூத்துக்குடி மகளிர் கல்லூரியில் படித்ததால் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சராக இருக்கிறேன் அமைச்சர் கீதாஜீவன் பெருமிதம்  

Next Post

திமுக தலைவராக 6ம் ஆண்டு தொடங்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் – கனிமொழி கருணாநிதி நேரில் வாழ்த்து..

Next Post
திமுக தலைவராக 6ம் ஆண்டு தொடங்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் – கனிமொழி கருணாநிதி நேரில் வாழ்த்து..

திமுக தலைவராக 6ம் ஆண்டு தொடங்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் - கனிமொழி கருணாநிதி நேரில் வாழ்த்து..

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In