• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

சிறு, குறு, நடுத்தர தொழில்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பட்ஜெட்டில் ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். தூத்துக்குடி விழாவில் கனிமொழி எம்.பி பேச்சு

policeseithitv by policeseithitv
August 23, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
சிறு, குறு, நடுத்தர தொழில்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பட்ஜெட்டில் ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். தூத்துக்குடி விழாவில் கனிமொழி எம்.பி பேச்சு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி

காமராஜ் கல்லூரியில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மாவட்ட தொழில் மையம் சார்பில் தொழிற்கடன் வசதியாக்கல் முகாம் மற்றும் கடன் ஆணைகள் வழங்கும் விழாவிற்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், சண்முகையா எம்.எல்.ஏ, மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் ஸ்வர்ணலதா வரவேற்புரையாற்றினார்.

தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்.பி பேசுகையில் நாட்டின் பொருளாதாரம் 35 சதவீதம் சிறு, குறு, நடுத்தர தொழில்களை சார்ந்துதான் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஏற்றுமதியில் 45 சதவீதம் சிறு. குறு, நடுத்தர தொழில்களின் பங்கு உள்ளது. இந்த தொழில்களின் முக்கியத்துவத்தை நாம் உணர வேண்டும். இன்று மிகப்பெரிய தொழிற்சாலைகள் எல்லாம் அதிக பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி தருவது கிடையாது. ஏனென்றால் அவை தொழில்நுட்பங்கள் சார்ந்தவை. ஆனால் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கிதரக்கூடியது சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகள்தான். யாராக இருந்தாலும் ஒரு சிறிய தொழில் செய்ய வேண்டும் என்பதுதான் அவர்களது மிகப்பெரிய கனவு. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மதுரை, விருதுநகர் போன்ற மாவட்டங்கள் எல்லாம் கடன் வழங்குவதற்கான இலக்கினை அடையவில்லை. திருப்பூர் மாவட்டம் ரூ.400 கோடி அளவிற்கு கடன் வழங்கியிருக்கிறது. நாம் தற்போது ரூ.315 கோடி மதிப்பில் கடனுதவியினை இன்று வழங்குகின்றோம். எனவே நம்முடைய அடுத்த இலக்கு ரூ.500 கோடியாக இருக்க வேண்டும். சிறு. குறு, நடுத்தர தொழில்களின் முக்கியத்துவத்தை உணர்ந்துதான் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பட்ஜெட்டில் ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். சிறு. குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்துவதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகங்களை சேர்ந்த இளைஞர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் நோக்கத்தில் அம்பேத்கர் பெயரில் திட்டத்தினை வகுத்து அதே போல் கலைஞர் ஆட்சிக்காலத்தில் தான் சிப்காட் கொண்டு வரப்பட்டது என்பதை நாம் மறந்து விட முடியாது. நாம் கடன் வாங்கி இன்னும் தொழிலை விரிவுப்படுத்த வேண்டுமென்றால் இப்போது வாங்கிய கடனை சரியாக கட்ட வேண்டும். நீங்கள் சரியாக கடனை திருப்பி செலுத்துவீர்கள் என்ற நம்பிக்கையில் தான் உங்களுக்கு கடன் வழங்கியுள்ளார்கள். சிறப்பானதாக, தனித்துவமாக நாம் உருவாக்கும் பொருட்கள் இருக்க வேண்டும். இப்படி செய்தால் மிகப்பெரிய வெற்றியாளர்களாக மாற முடியும். நமது மாவட்டத்தை எல்லோரும் திரும்பி பார்க்கும் மாவட்டமாக மாற்ற வேண்டும். அப்படி மாற்றக்கூடிய திறமை உங்கள் அத்தனை பேருக்கும் இருக்கிறது என கனிமொழி எம்.பி தெரிவித்தார்.

அமைச்சர் கீதாஜீவன் அவர்கள் தெரிவித்ததாவது: இன்றைய முகாமில் 3145 பேருக்கு 315 கோடி கடன் ஆணை வழங்கப்படவுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் இளைஞர்கள் வேலை வாங்குபவர்களாக இல்லாமல் வேலை வழங்குபவர்களாக இருக்க வேண்டும் என்று இளைஞர்களுக்கு அறிவுரை வழங்குவார்கள். நீங்கள் துணிந்து தொழில் தொடங்கினால் தான் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி ஏற்படும். மாவட்ட தொழில் மையம், சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனம் மூலம் அதிக தொழில் முனைவோர்களை உருவாக்க வேண்டும் என்று அதிக முயற்சி எடுத்து வருகிறார்கள். அந்நிய முதலீடுகள், உள்நாட்டு முதலீடுகள் என ரூ.2 லட்சம் கோடி முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளன. நமது மாவட்டத்தில் அதிக அளவு தொழில் தொடங்க கடன் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.; கலைஞர் காலத்தில் 215 பேருக்கு வழங்கப்பட்ட பட்டாக்களுக்கு மீண்டும் இன்று உரிமைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது. என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா, தாசில்தார் பிரபாகர், மகளிர் திட்ட அலுவலர் வீரபுத்திரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பாரத ஸ்டேட் வங்கி துரைராஜ், மாநகராட்சி மண்டலத்தலைவர் நிர்மல்ராஜ், மாநகராட்சி பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன், சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், நகரமைப்பு குழு தலைவர் ராமகிருஷ்ணன், கவுன்சிலர்கள் பொன்னப்பன், சந்திரபோஸ், முத்துமாரி, ரவிசந்திரன், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், மேகநாதன், மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், வட்டச்செயலாளர்கள் பாலன், சுப்பையா, மற்றும் கருணா, பிரபாகர், அல்பட், தமிழ்நாடு பணைபாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநில தலைவரும் மதர் சமூக சேவை நிறுவன இயக்குநருமான கென்னடி, மாவட்ட தொழில் மையத்தில் வள அலுவலர்கள் பானுமதி, ஷெகினா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன்பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

உலக டேக்வாண்டா போட்டியில் பங்கேற்கும் தூத்துக்குடி வீராங்கனைக்கு கலெக்டர் செந்தில்ராஜ் பாராட்டு

Next Post

மாப்பிள்ளையூரணி பகுதி வளர்ச்சிக்கு 13 கோடியே 32 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு திட்டப்பணிகள்: மக்களுக்கு தேவையான அடிப்படை திட்டங்கள் அனைத்தையும் எங்களை சந்திக்கும் போதெல்லாம் கேட்டு பெறும் சிறந்த  பஞ்.தலைவர் சரவணகுமார்  எம்பி கனிமொழி, எம்எல்ஏ சண்முகையா, மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் பாராட்டினர்..

Next Post
மாப்பிள்ளையூரணி பகுதி வளர்ச்சிக்கு  13 கோடியே 32 லட்சம் மதிப்பீட்டில்  பல்வேறு திட்டப்பணிகள்:  மக்களுக்கு தேவையான அடிப்படை திட்டங்கள் அனைத்தையும் எங்களை சந்திக்கும் போதெல்லாம் கேட்டு பெறும் சிறந்த   பஞ்.தலைவர் சரவணகுமார்   எம்பி கனிமொழி, எம்எல்ஏ சண்முகையா, மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் பாராட்டினர்..

மாப்பிள்ளையூரணி பகுதி வளர்ச்சிக்கு 13 கோடியே 32 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு திட்டப்பணிகள்: மக்களுக்கு தேவையான அடிப்படை திட்டங்கள் அனைத்தையும் எங்களை சந்திக்கும் போதெல்லாம் கேட்டு பெறும் சிறந்த  பஞ்.தலைவர் சரவணகுமார்  எம்பி கனிமொழி, எம்எல்ஏ சண்முகையா, மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் பாராட்டினர்..

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In