• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

மாப்பிள்ளையூரணி பகுதி வளர்ச்சிக்கு 13 கோடியே 32 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு திட்டப்பணிகள்: மக்களுக்கு தேவையான அடிப்படை திட்டங்கள் அனைத்தையும் எங்களை சந்திக்கும் போதெல்லாம் கேட்டு பெறும் சிறந்த  பஞ்.தலைவர் சரவணகுமார்  எம்பி கனிமொழி, எம்எல்ஏ சண்முகையா, மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் பாராட்டினர்..

policeseithitv by policeseithitv
August 25, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
மாப்பிள்ளையூரணி பகுதி வளர்ச்சிக்கு  13 கோடியே 32 லட்சம் மதிப்பீட்டில்  பல்வேறு திட்டப்பணிகள்:  மக்களுக்கு தேவையான அடிப்படை திட்டங்கள் அனைத்தையும் எங்களை சந்திக்கும் போதெல்லாம் கேட்டு பெறும் சிறந்த   பஞ்.தலைவர் சரவணகுமார்   எம்பி கனிமொழி, எம்எல்ஏ சண்முகையா, மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் பாராட்டினர்..
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி, ஆகஸ்ட்,26

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குபட்பட்ட மாப்பிள்ளையூரணி பகுதியில் நடைபெற்ற விழாவிற்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை வகித்தார். சண்முகையா எம்.எல்.ஏ முன்னிலை வகித்தார். மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் வரவேற்புரையாற்றினார்.

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மாப்பிள்ளையூரணியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தின் கீழ் ரூ.10.13 இலட்சம் மதிப்பில் அங்கன்வாடி கட்டிடத்தையும், சிலோன் காலனியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.11.77 இலட்சம் மதிப்பில் பொதுவிநியோகக் கடை கட்டிடம் மற்றும் ரூ.13 இலட்சம் மதிப்பில் பொதுவிநியோகக் கடை கட்டிடத்தையும் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து வடக்கு சோட்டையன் தோப்பில் உள்ள அம்பேத்கார் படிப்பகத்தை பார்வையிட்டு வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு அங்குள்ள புத்தகங்களை வாசித்தார்.

மேலும், மாப்பிள்ளையூரணி ஊராட்சி வடக்கு சோட்டையன் தோப்பில் ரூ.10 இலட்சம் மதிப்பில் பல்நோக்கு கட்டிடம் மற்றும் பூப்பாண்டியாபுரத்தில் ரூ.12.30 இலட்சம் மதிப்பில் பொதுவிநியோகக் கடை கட்டிடத்திற்கு கனிமொழி எம்.பி அடிக்கல் நாட்டி கனிமொழி எம்.பி பேசுகையில் மாப்பிள்ளையூரணி பகுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். அதிகம் நான் வருகை தந்த இடமாக மாப்பிள்ளையூரணி உள்ளது. அதற்கு காரணம் எப்போதும் சந்திக்கின்ற நேரமெல்லாம் மக்களுக்கு தேவையான அடிப்படை பணிகளை திட்டங்களை செய்து கொடுக்க வேண்டும் என்று சரவணக்குமார் கோரிக்கை வைப்பார். பல பணிகளை தொடங்கி வைப்பதற்கு அழைப்பு விடுத்ததின் பேரில் இது போன்ற நல்ல பணிகள் நடைபெறுகின்றன. சட்டமன்ற உறுப்பினரும் தனது தொகுதி நிதியின் கீழ் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எங்களுக்கு அடிக்கடி சொல்வது எல்லாம் கிராமப்புறங்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். என்று கூறுவார் அதனடிப்படையில் இந்த பகுதியில்

13 கோடியே 32 லட்சம் மதிப்பீல் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. சில பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இந்த பகுதியில் முதலைமைச்சரின் கிராமசாலை மேம்பாட்டு நிதி 2 கோடிக்கு மேல் ஓதுக்கப்பட்டு பணிகள் நடைபெறுகிறது. மின் மயாணம் பணியும் நடைபெறுகிறது. தேர்தல் அறிக்கையில் கூறியப்படி பெண்களுக்கு செப்டம்பர் 15ம்தேதி கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ1000 வழங்கப்படுகிறது. அதே போல் மதிய உணவு வழங்கப்படுவதை போல் முதலமைச்சரின் காலை உணவு திட்டமும் முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டு நடைபெறுகிறது. அனைவருடைய வாழ்வாதரமும் உயர வேண்டும். கல்வி வளர்ச்சி என எல்லாம் திராவிட மாடல் ஆட்சியில் கிடைக்கின்றது. தமிழக முதலமைச்சருக்கு நீங்கள் அனைவரும் துணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

கலெக்டர் செந்தில்ராஜ் பேசுகையில் கடந்த 2 வருடங்களில் மாப்பிள்ளையூரணி பகுதிக்கு கனிமொழி எம்.பி அதிகம் வந்துள்ளார். இங்குள்ள பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் என்னை சந்திக்கும் போதெல்லாம் குடிதண்ணீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும் பல்வேறு சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பார். இந்த பகுதி வளர்ந்து வரும் பகுதியாகும் மக்கள் ஜனத்தொகைக்கேற்ப குடிதண்ணீர் வழங்கும் வகையில் கோரம்பள்ளம், பொன்னாங்குறி;ச்சி, பகுதியிலிருந்து குடிதண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. பொன்னாங்குறிச்சி பகுதியில் உள்ள மின்மோட்டார் பழுது ஏற்பட்டுள்ளதால் மூன்றரை கோடி செலவில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அது முழுமையாக முடிந்ததும் தினமும் 22லட்சம் லிட்டர் தண்ணீர் கூடுதலாக வழங்கப்படும். வரும் காலங்களில் முழுமையான பணிகள் நிறைவு பெறும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றார்.

விழாவில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி தாக்கரேசுபம் ஞானதேவ் ராவ், துணைஆட்சியர் (பயிற்சி) பிரபு, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன் பாண்டியன், தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தா, உதவி அலுவலர் மகேஸ்வரி, பொறியாளர் தளவாய் மேற்பார்வையாளர் முத்துராமன், பொதுவிநியோக திட்ட கூட்டுறவு சார்பதிவாளர் அந்தோணி பட்டுராஜ், துணை பதிவாளர் மாரியப்பன், செயலாற்றியர் சாம் டேனியல்ராஜ், தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, ஆதிதிராவிடநல அணி அமைப்பாளர் டிடிசி ராஜேந்திரன், மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஆரோக்கிய மேரி, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஸ்டாலின், திமுக ஒன்றிய அவைத்தலைவர் ஜோதிடர் முருகன், துணைச்செயலாளர்கள் கணேசன், வசந்தகுமாரி, ராமசந்திரன், ஹரிபாலகிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர்கள் அந்தோணி தனுஷ்பாலன், தொம்மைசேவியர், ஆனந்தி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, மகேஸ்வரி, சக்திவேல், ஜேசுராஜா, பாண்டியம்மாள், கூட்டுறவு கடன்சங்க செயலாளர் பாலமுருகன், துணைத்தலைவர் சிவக்குமார், மாவட்ட பிரதிநிதிகள் தர்மலிங்கம், வெயில்ராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பிளோமின்ராஜ், மாவட்ட ஓருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சரஸ்வதி, குழந்தை வளர்ச்சி அலுவலர் திலகா, தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூர்மணி, ஒன்றிய வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சோனாராஜன், ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் ஜெஸிந்தா, முன்னாள் ஓன்றிய துணைசெயலாளர் மைக்கேல்ராஜ், மகளிர் அணி சண்முகத்தாய், சிவபாலா, அங்காளஈஸ்வரி, திமுக கிளைச்செயலாளர்கள் பொன்னுச்சாமி, காசி, சுபாஷ், ராமசந்திரன், சுதாகர், சேவியர், முருகன், அன்பு, வேல்ராஜ், சந்திரசேகர், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் மகாராஜன், மற்றும் இளைஞர் அணி ராஜேந்திரன், கௌதம், தனபால், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார் மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

சிறு, குறு, நடுத்தர தொழில்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பட்ஜெட்டில் ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். தூத்துக்குடி விழாவில் கனிமொழி எம்.பி பேச்சு

Next Post

நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி தூத்துக்குடியில் அ.தி.மு.க செல்லபாண்டியன் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

Next Post
நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி  தூத்துக்குடியில் அ.தி.மு.க செல்லபாண்டியன் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி தூத்துக்குடியில் அ.தி.மு.க செல்லபாண்டியன் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In