நாகப்பட்டினம் ஆகஸ்ட் 22
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அன்னை ஆரோக்கிய மாதா திருமண மண்டபத்தில் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆண்டு பெருவிழா 2023 நடைபெறவுள்ளதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது.
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அன்னை ஆரோக்கிய மாதா திருமண மண்டபத்தில் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆண்டு பெருவிழா 2023 நடைபெறவுள்ளதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்ததாவது :
புனித ஆரோக்கிய மாதா ஆண்டு பெருவிழா-2023 ஆகஸ்டு 29.08.2023 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 08.09.2023 அன்று வரை நடைபெறவுள்ளது. திருவிழா காலங்களில் வேளாங்கண்ணி நகரத்திலிருந்து பள்ளிக்கு செல்லும் பள்ளி வாகனங்களை தடையின்றி சென்றுவர உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். திருவிழா காலங்களில் பொதுமக்கள் மற்றும் திருப்பயணிகள் கூட்ட நெரிசலின்றி பேருந்துகளில் பயணம் செய்ய பல்வேறு மண்டலங்களிலிருந்து போதுமான அளவு பேருந்துகளை 24 மணி நேரமும் இயக்கிட வேண்டும். பயணிகள் சிரமமின்றி பயணம் செய்வதற்கு ஏதுவாக பேருந்து நிறுத்துமிடங்கள் குறித்து தகவல் பலகைகள் வைக்கப்பட வேண்டும்.
வேளாங்கண்ணியில் யாத்திரிகர்கள் வருகைக்கு தகுந்தவாறு மருத்துவர்களை 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணி அமைத்திட வேண்டும். 10 இடங்களுக்கு மேல் மருத்துவ முகாம்கள் அமைத்து நடத்திட வேண்டும். பொதுமக்கள் கடற்கரையின் அருகில் செல்வதற்கு எல்லை நிர்ணயம் செய்து தடை விதித்திட வேண்டும். மேலும் திருவிழாநாட்களில் கடற்கரையில் குளிக்க தடை விதிக்க வேண்டும். அனைத்து உணவு விடுதிகளை ஆய்வு மேற்கொண்டு உணவின் தரத்தை பரிசோதனை செய்ய வேண்டும். இறைச்சி மீன் வருவல் விற்பனையினை சுகாதாரமாக உள்ளதா என்பதை உறுதியினை வேண்டும். தேவையான தீயணைப்பு வாகனங்கள், உயிர் காக்கும் ரப்பர் படகுகள் மற்றும் தீயணைப்பு வீரர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சிதலைவர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.இந்தக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) இரா.முத்துகுமாரசாமி, உதவி பங்கு தந்தை ஆண்டோ ஜேசுராஜ், பேரூராட்சி தலைவர் அ.டயானா சர்மிளா, காவல் துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், பேரூராட்சி துணைத்தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன், வேளாங்கண்ணி பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுச்சாமி மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

