தூத்துக்குடி.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 403 ஊராட்சி தலைவர்கள் அடங்கிய கூட்டமைப்பு கூட்டம் டாக்டர் ராஜேஸ்குமார் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக மாநில கூட்டமைப்பு தலைவர் முனியாண்டி கலந்து கொண்டு பேசுகையில்: ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு 29 அதிகாரம் உள்ளன. இதை யாருக்கும் அடிபணியாமல் நீங்கள் பணியாற்றலாம். நீங்கள் தங்களது தேவைகளை கேட்டு பெறுவதற்கும், குறைகளை சொல்வதற்கும், கலெக்டரை மட்டுமே தொடர்பு கொண்டால் போதும்.
சென்னையில் வரும் 30ம் தேதி 11 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஊராட்சி மன்ற தலைவர்களின் உரிமை மீட்பு பேரணி நடைபெறுகிறது. அதில் அனைவரும் கலந்து கொண்டு நமக்கான உரிமையை வென்றெடுக்க வேண்டும். ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு ரூ.30000ஃ- ஊதியம் வழங்க வேண்டும். தூய்மை பணியாளர்கள், நீர்தேக்க தொட்டி பராமரிப்பாளர்கள் காலி பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்பட வேண்டும். தமிழக அரசு பணிநியமனம் வழங்க வேண்டும் அல்லது தலைவர்கள் நியமனம் செய்ய தமிழக அரசு அதிகாரம் வழங்க வேண்டும். 2010ல் வழங்கப்பட்ட நிதி போல் தற்போது ஊராட்சி மன்றத்திற்கு பொதுநிதி 2020-21ல் மக்கள் தொகைக்கு ஏற்ப வழங்க வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
12 ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் அதிஷ்ட கணபதி, சித்திரை செல்வன், ஐயாதுரை, சண்முகையா, வேல்கனி, கிருஷ்ணவேணி, ஜெயராணி உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.

