• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

அதிமுக ஆட்சியில் எந்த அடிப்படை பணியும் செய்து கொடுக்காமல் முழுமையாக புறக்கணிக்கப்பட்ட மாப்பிள்ளையூரணி ஜோதி பாஸ்நகர் பகுதிக்கு குடிநீர் திட்டப்பணியை துவக்கி வீடுகளுக்கு 298 குடிதண்ணீர் இணைப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். ஊராட்சிமன்ற தலைவர் சரவணக்குமார்  மகிழ்ச்சி வெள்ளத்தில் பொதுமக்கள் பஞ். தலைவருக்கு குவியும் பாராட்டுக்கள்

policeseithitv by policeseithitv
August 19, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
அதிமுக ஆட்சியில் எந்த அடிப்படை பணியும் செய்து கொடுக்காமல் முழுமையாக புறக்கணிக்கப்பட்ட மாப்பிள்ளையூரணி ஜோதி பாஸ்நகர் பகுதிக்கு குடிநீர் திட்டப்பணியை துவக்கி வீடுகளுக்கு 298  குடிதண்ணீர் இணைப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.  ஊராட்சிமன்ற தலைவர் சரவணக்குமார்      மகிழ்ச்சி வெள்ளத்தில் பொதுமக்கள்  பஞ். தலைவருக்கு குவியும் பாராட்டுக்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி,

ஆகஸ்ட்,19

 

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி ஜோதி பாஸ்நகர் கருமாரியம்மன் கோவில், பகுதியில் நடைபெற்ற விழாவிற்கு மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும், தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளருமான, கூட்டுறவு கடன் சங்க தலைவர் சரவணக்குமார், தலைமை வகித்தார்.

திமுக கிளை செயலாளர் வேல்ராஜ் முன்னிலை வகித்தார். அப்பகுதியில் மக்கள் பணியாற்று மாரியப்பன் வரவேற்பு உரை ஆற்றினார்.

பின்னர் ஜோதி பாஸ்நகர் பகுதியில் குடியிருக்கும் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வீட்டிற்கு நேரடி இணைப்பு வழங்கும் திட்டத்திற்கான பூமி பூஜையை சரவணக்குமார் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், இந்த பகுதி உருவாக்கப்பட்டு சுமார் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகின்றன. கடந்த பத்து ஆண்டுகாலமாக அதிமுக ஆட்சியில் எந்த அடிப்படை பணிகளும் முறையாக நடைபெறவில்லை. குறிப்பாக ஜோதிபாசு நகர் அதிமுக ஆட்சியில் முழுமையாக புறக்கணிக்கப்பட்டது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் தமிழக முதலமைச்சர் தளபதியார் அறிவுரையின்படி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும்;, மீன் வளம் மற்றும் மீனவர் நலன், கால்நடை துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின் படி இந்த பகுதி மக்கள் வைத்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் கருமாரி அம்மன் கோவிலுக்கு ஊராட்சியின் சார்பில் தீர்வை வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் கட்டுமான பணிகளின் போது சில பொருட்கள் உபகரணங்கள் செய்துள்ளேன். பகுதியில் புதிய பல சாலைகள் அமைத்து கொடுத்துள்ளேன். கொரனா காலக்கட்டத்தில் ஏழ்மை நிலையில் இருக்கும் அப்பகுதி மக்களுக்கு சில இயன்ற உதவிகளை செய்து தந்துள்ளேன். அதேபோல் இப்பகுதியில் மின்கம்பத்தால் பாதிப்பு என்று கூறியவுடன் இரும்பு கம்பம் அகற்றப்பட்டு சிமிண்ட் கம்பம் அமைத்து கொடுத்துள்ளேன். அதேபோல் அறுபது ஆயிரம் லிட்டர் குடிதண்ணீர் கொள்ளளவு கொண்ட நீர்தேக்க தொட்டி அமைத்து கொடுத்துள்ளேன். இந்த பகுதியில் தற்போது

 

298 பேருக்கு ஊராட்சி மூலம் தீர்வை வழங்கப்பட்டு உள்ள வீடுகளுக்கு ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் வீட்டிற்கு நேரடியாக குடிதண்ணீர் இணைப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளேன்.

இதனால் அப்பகுதியில் உள்ள மக்களின் நீண்ட கால குடிநீர் பிரச்சனை தீர்வுக்கு வருகிறது என்றார். அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான

உங்களது பூங்கா அமைக்க வேண்டும். என்ற பணியை விரைவில் செய்து கொடுத்து விடுபட்ட சாலைக்கும் புதிய சாலைகள் அமைத்து தருவேன் என்று பேசினார்.

பின்னர் மகளிர் சுயஉதவிக்குழு பெண்களுக்கு சால்வை வழங்கி கௌரவித்தார். விழாவில் திமுக ஒன்றிய துணை செயலாளர்கள், வசந்த குமாரி, கணேசன், ராமச்சந்திரன், ஒன்றிய கவுன்சிலர் தொம்மை சேவியர், ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, திமுக கிளை செயலாளர் சந்திரசேகர், முன்னாள் ஒன்றிய துணை செயலாளர் மைக்கேல்ராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்த குமார், மகளிரணி சண்முகத்தாய், மற்றும் ராயப்பன், பாண்டி கௌதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாப்பிள்ளையூரணி ஜோதி பாஸ்நகர் பகுதிக்கு குடிநீர் திட்டப்பணியை

துவக்க வருகை தந்த பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமாருக்கு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், பல்வேறு அமைப்புகள் சார்ந்த நிர்வாகிகள், உற்சாக வரவேற்பு கொடுத்து பொன்னாடை போர்த்தி தங்களது பகுதி மக்கள் சார்பில் நன்றிகளை தெரிவித்தனர். இந்த சிறப்புமிக்க நிகழ்ச்சி ஜோதிபாசு நகரில் விழாக்கோலம் பூண்டது. நீண்ட நாள் கோரிக்கை யான குடிநீர் பிரச்சனை தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுத்த பஞ்சாயத்து தலைவருக்கு பாராட்டுக்கள் குவிந்தது. அதே சமயத்தில் பொதுமக்கள் மகிழ்ச்சியே ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர்.

செய்தி தொகுப்பு : சிறப்பு செய்தியாளர்

போலீஸ் செய்தி நியூஸ் சேனல்

Previous Post

ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு மாவட்ட கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது

Next Post

தூத்துக்குடி சிவ குளம் பகுதியில் கனிமொழி எம்.பி மரக்கன்று நட்டினார். அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, கலெக்டர் செந்தில்ராஜ் பங்கேற்பு

Next Post
தூத்துக்குடி சிவ குளம் பகுதியில் கனிமொழி எம்.பி மரக்கன்று நட்டினார். அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, கலெக்டர் செந்தில்ராஜ் பங்கேற்பு

தூத்துக்குடி சிவ குளம் பகுதியில் கனிமொழி எம்.பி மரக்கன்று நட்டினார். அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, கலெக்டர் செந்தில்ராஜ் பங்கேற்பு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In