தூத்துக்குடி
திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 2024ல் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆளும் பிஜேபி அரசை வீழ்த்தி இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்று இரண்டு முறை இந்தியா கூட்டணி நடத்திய ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட பிஜேபி கூட்டணியில் இல்லாத மற்ற மாநில கட்சி முதலமைச்சர்களும் கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர்.
2024ல் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும். என்ற இலக்கோடு திமுகவில் உள்ள 23 அணிகளையும் தலைமை கழகம் ஓருங்கிணைத்து பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதற்கட்டமாக திருச்சியில் பாக முகவர்கள் கூட்டம் நடத்திய நிலையில் இரண்டாவது கூட்டம் பல மாவட்டங்களை உள்ளிடக்கி ராமநாதபுரத்தில் நடைபெற்றது. அதில் முதலமைச்சர் பாக முகவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை எடுத்துரைத்தார்.
இந்நிலையில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி கிழக்கு ஓன்றிய திமுக செயலாளரும் ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன்சங்க தலைவருமான சரவணக்குமார், தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், சண்முகையா எம்.எல்.ஏ ஆணைக்கிணங்க, ராமநாதபுரத்திற்கு பாகமுகவர்கள் அனைவரையும் ஓருங்கிணைத்து முதலமைச்சரின் ஆலோசனை கருத்துகளையும் கேட்டறிந்துள்ளனர். வரும் நாடாளுமன்ற தேர்தலில் தலைமைக்கழகம் அறிவிக்கும் வேட்பாளருக்கு முழுமையாக பணியாற்றும் வகையில் பாகமுகவர்கள் தங்களது பகுதியில் பணிகளை துவக்கியுள்ளனர்.

