தூத்துக்குடி
77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டையில் உள்ள தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு தலைவர் வசுமதி அம்பா சங்கர் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினார்.
பின்னர் கூட்டுடன்காடு பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு காலை உணவு வழங்கினார். விழாவில், வட்டார வளர்ச்சி அலுவலர் ஹெலன்பொன்மணி, ஒன்றிய குழு துணை தலைவர் ஆஸ்கர், ஒன்றிய கவுன்சிலர்கள் அந்தோணி தனுஸ்பாலன், ஆனந்தி, முத்துமாலை, ஜெயலெட்சுமி, முத்துக்குமார் மற்றும் தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் அம்பாசங்கர், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் மாரிச்செல்வம் உள்பட அரசு சார்ந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

