தூத்துக்குடி திமுக மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளரும், திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளருமான வசந்தம் ஜெயக்குமார் தனது பிறந்த நாளை முன்னிட்டு மாநில திமுக இளைஞர் அணி செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை சிறப்பு திட்ட அமலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சென்னையில் உள்ள பசுமை வழி சாலை இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில்: திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான தளபதியார் உங்களுக்கு மாநில அளவிலான பொறுப்பு வழங்கி திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளராக நியமனம் செய்து கௌரவித்துள்ளார். அவரது நம்பிக்கைக்கு பாத்திரமாக நீங்களும் பணியாற்றி வருகிறீர்கள். தொடர்ந்து தலைமை கழகத்தின் உத்தரவு படி கட்சிப்பணிகளை சிறப்பாக செய்யுங்கள். உங்களுடைய எதிர்காலம் இனிவரும் காலங்களில் நல்லபடியாக அமையும். உழைத்தவர்களுக்கு திமுகவில் என்றும் அங்கீகாரம் உண்டு என்பதை மனதில் கொண்டு, நல்லமுறையில் பணியாற்றுங்கள். அனைத்தும் நன்றாக நடைபெறும். மேலும், நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடன் வாழ வேண்டுமென்று வாழ்த்தினார்.

