• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் வடக்கு,தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் : முன்னாள் அமைச்சர் சி.த செல்லப்பாண்டியனை பாராட்டிய துணைப் பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி மற்றும் மூத்த நிர்வாகிகள்!! உற்சாகத்தில் தூத்துக்குடி அதிமுகவினர்.. 

policeseithitv by policeseithitv
July 30, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
மதுரை அதிமுக மாநாடு மக்களவைத் தோ்தல் வெற்றிக்கான அடித்தளம் :  கேபி முனுசாமி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி, ஜூலை,30

 

அதிமுகவின் மூன்றாம் தலைமுறை எடப்பாடி பழனிச்சாமி என தூத்துக்குடியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கே.பி. முனுசாமி புகழாரம் சூட்டினார்.

அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு மதுரையில் நடைபெறுவதையொட்டி தூத்துக்குடியில் ஒருங்கிணைந்தஅதிமுக தெற்கு, வடக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் தனியார் மஹாலில் வைத்து நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏவுமான கடம்பூர் செ.ராஜு முன்னிலை வகித்தார்.

முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்புச் செயலாளருமான, சி.த செல்லப்பாண்டியன் அதிமுக தொண்டர்கள் புடை சூழ

தூத்துக்குடி மாநகர எல்கையில் வைத்து ஆலோசனைக் கூட்டத்திற்கு வருகை தந்த முன்னாள் அமைச்சர் மற்றும் மூத்த மாநில நிர்வாகிகளுக்கு

அதிமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளித்தார்.20 வேன், ஏராளமான கார்களில், அதிமுக தொண்டர்கள் மகளிர்கள் குடை சூழ சென்று மிகப் பிரம்மாண்டமான முறையில் வரவேற்பு அளித்தார்.,

பின்னர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய அதிமுக

துணைப் பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.பி. முனுசாமி எம்.எல்.ஏ பேசுகையில் ஆகஸ்ட் 20ம் தேதி மதுரையில் அதிமுக எழுச்சி மாநாடு நடைபெறுகிறது. அரசியலில் தன்னை நிலை நிறுத்தி கொள்ளவும் கொள்கைகளை தெரிவிக்கவும் மாநாடு நடைபெறுகிறது. எம்.ஜி.ஆர் ஜெயலலிதா வழியில் எல்லா வழிகளிலும் கடுமையான சோதனைகளை கடந்து தனது திறமைகளின் மூலம் வெற்றியை கண்ட மூன்றாம் தலைமுறை எடப்பாடியார் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்த பின் நடைபெறும் மாநாட்டில் தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து 1 லட்சம் பேர் கலந்து கொள்வதாக கூறியது மிக்க மகிழ்ச்சி. கூடுதலாக 25ஆயிரம் பேரை சேர்த்து அழைத்து வாருங்கள் இங்கு வரும் வழியில் இரண்டு மாவட்ட செயலாளர்கள் தலைமையிலும் அதே போல் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட தின் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் அதிமுக மிக எழுச்சியோடு இருக்கிறது. என்பதற்கு இதுவே ஒரு சான்று என்று பாராட்டினார். அதுபோல் மாநில நிர்வாகிகள் பலரும் செல்ல பாண்டியனை மனதார பாராட்டினர். தூத்துக்குடி ஆலோசனைக் கூட்டத்திற்கு வருகை தந்த முன்னாள் அமைச்சர்கள்

மாநில நிர்வாகிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் செல்ல பாண்டியன் ஏற்பாட்டில்

தூத்துக்குடி டூ மதுரை செல்லும்

டோல்கேட் அருகே சுமார் 1000 தொண்டர்களோடு செண்ட மேளம், கும்பம் எடுத்து நிர்வாகிகள் வரிசையாக நின்று பூங்கொத்து, சால்வை அணிவித்து பட்டாசு வெடித்து

வெகு சிறப்பாக உற்சாக வரவேற்பு அளித்தார். இதனால் அப்பகுதியில் சுமார் 20 நிமிடத்திற்கு மேல் வாகனங்கள் அணிவகுப்பு போல் காட்சி அளித்தது அதன் பிறகு மாநில நிர்வாகிகள் வாகனங்கள் பின்பு கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வரை அமைப்புச் செயலாளர் செல்லபாண்டியன் தலைமையில்

அதிமுக தொண்டர்கள் வாகனங்களில் அதிமுக கொடியேந்தி அணிவகுத்தனர்

இந்த சிறப்பான ஏற்பாடுகளை பார்த்த மூத்த நிர்வாகிகள்

தூத்துக்குடி அதிமுக மிக எழுச்சியோடு

பலமாக உள்ளது என்பதற்கு இது ஒரு சான்று

வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் அதிமுக அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அதற்கு அனைவரும் ஒற்றுமையாக உழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந்த

ஆலோசனை கூட்டத்தில் துணைப் பொதுச்செயலாளரும் திண்டுக்கல் கிழக்குமாவட்ட செயலாளருமான முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் எம்.எல்.ஏ, பொருளாளரும் திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சீனிவாசன் எம்.எல்.ஏ, அமைப்பு செயலாளரும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எம்.எல்.ஏ, அமைப்பு செயலாளரும் நாமக்கல் மாவட்ட செயலாளருமான முன்னாள் அமைச்சர் தங்கமணி எம்.எல்.ஏ, தலைமை நிலைய செயலாளரும் கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளருமான முன்னாள் அமைச்சர் வேலுமணி எம்.எல்.ஏ, அமைப்பு செயலாளரும் விழுப்புரம் மாவட்ட செயலாளருமான முன்னாள் அமைச்சர் சண்முகம், எம்.பி, மகளிர் அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வளர்மதி, அமைப்பு செயலாளரும் மதுரை மாநகர் மாவட்ட செயலாளருமான முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு எம்.எல்.ஏ, ஜெ பேரவை செயலாளரும் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான முன்னாள் அமைச்சர் உதயகுமார் எம்.எல்.ஏ, அமைப்பு செயலாளரும் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளருமான ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ, அமைப்பு செயலாளர் கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் ஆலோசணை வழங்கி சிறப்புரையாற்றினார்கள்.

 

கூட்டத்தில் இரண்டாவது வரிசையில் முன்னாள் அமைச்சர் செல்லப் பாண்டியனுக்கு இருக்கைகள் போடப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைப் பார்த்த மாநில நிர்வாகிகள் மாநில அமைப்பு செயலாளர் செல்லப் பாண்டியனுக்கு முன் வரிசையில்

இருக்கைகள் போடுங்கள் என

தெரிவித்ததாக கூறப்படுகிறது.

உடனே கூட்டமேடையில் சீட்டு அரேஞ்ச்மென்ட் செய்தவர்கள் பரபரப்புடன் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, வளர்மதி அருகே முன் வரிசையில் ஷேர் போட்டதாக கூறப்படுகிறது. அந்த அளவிற்கு

மாநில நிர்வாகிகள் யார் யாருக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதை கவனத்துடன் பார்த்து உண்மையாகவும் சிறப்பாகவும் செயல்படுபவர்களை அதே மேடையில் பாராட்டிய தருணத்தையும்

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பார்க்க முடிந்தது.

முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் செயல் பாடுகளை பாராட்டிய மாநில நிர்வாகிகளின்

உற்சாகமான பாராட்டு தூத்துக்குடி அதிமுக தொண்டர்களை

மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது.

இந்த கூட்டத்திற்கு

முன்னாள் எம்.எல்.ஏக்கள் மோகன், சின்னப்பன், இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம், மாவட்ட அவைத்தலைவர் திருபாற்கடல்,

மாநில மருத்துவர் அணி இணைச் செயலாளர் டாக்டர் ராஜசேகரன்

பெருமாள்சாமி, ஒன்றிய செயலாளர் சண்முகவேல், மாவட்ட அணி நிர்வாகிகள் யூ.எஸ் சேகர், சுதாகர், நடராஜன், பிரபாகர், தனராஜ், வீரபாகு, பொன்ராஜ்,

முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ், முன்னாள் நகர்மன்ற தலைவர் ஹென்றி, முன்னாள் அரசு வழக்கறிஞர் ஆண்ட்ரூமணி, பகுதிசெயலாளர்கள் சேவியர், முருகன், பொன்ராஜ், ஜெய்கணேஷ், நட்டார்முத்து, தகவல் தொழில்நுட்ப அணி இணைச்செயலாளர் சோபன், வக்கீல்கள் சுகந்தன் ஆதித்தன், செங்குட்டுவன், பிள்ளைவிநாயகம், சரவணப்பெருமாள், மாநகராட்சி கவுன்சிலர்கள் வக்கீல் மந்திரமூர்த்தி, வெற்றிச்செல்வன், முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், மாநில பேச்சாளர்கள் கருணாநிதி, கொம்பையா, முன்னாள் கவுன்சிலர்கள் ஜெயக்குமார், சகாயராஜ், சர்மிளா அருள்தாஸ், சந்தனப்பட்டு, உள்பட பல்வேறு அணியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். மாநில அமைப்பு செயலாளர் சின்னத்துரை நன்றியுரையாற்றினார்.

Previous Post

மதுரை அதிமுக மாநாடு மக்களவைத் தோ்தல் வெற்றிக்கான அடித்தளம் : கேபி முனுசாமி

Next Post

தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக மகளிர் அணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Next Post
தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக மகளிர் அணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக மகளிர் அணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In