தூத்துக்குடி
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக மகளிர் அணி நிர்வாகிகள் தேர்வு குறித்து ஆலோசனை கூட்டம் மாநில மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், மாநில மகளிர் தொண்டர் அணி செயலாளர் ராணி வழிகாட்டுதலின் படி தெற்கு மாவட்;ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனைப்படி மாப்பிள்ளையூரணி திமுக அலுவலகத்தில் தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன்சங்க தலைவருமான சரவணக்குமார் தலைமை வகித்தார்.
மாநில மகளிர் அணி பிரச்சார குழு செயலாளரும் மாவட்ட கவுன்சிலருமான ஜெசி பொண்ராணி, பேசுகையில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆட்சியில் மகளிர்கென்று இலவச பேருந்து பயணம், அடுத்து செப்டம்பர் 15 முதல் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் வரவுள்ளது. உள்ளாட்சியில் பெண்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு என பல சாதனைகளை செய்துள்ள திமுக அரசின் திட்டங்களையும் சாதனைகளையும் வீடுதோறும் கொண்டு சேர்க்க வேண்டும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு இந்த கிழக்கு ஒன்றிய திமுக மகளிர் அணி பங்கு அதிகம் இருக்க வேண்டும். தலைமை கழகம் அறிவிக்கும் உத்தரவிற்கிணங்க மகளிர் அணியினர் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும். என்று கேட்டுக் கொண்டார்.
கூட்டத்தில் தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி அமைப்பாளரும் ஆழ்வார் திருநகரி பேரூராட்சி மன்ற தலைவருமான சாரதா பொன்இசக்கி, தெற்கு மாவட்ட திமுக மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஆரோக்கிய மேரி, துணை அமைப்பாளர் தயாநிதிபாண்டியன், ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் ஜெஸிந்தா, மகளிர் அணி சிவபாலா, எபன், மரிய ஜெயரூபி, மாரியம்மாள், நூர்ஜஹான் அப்பு, பாலசுந்தரி, அந்தோணி வளர்மதி, இசக்கியம்மாள், குரீஸ்வரி, மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

