தூத்துக்குடி
மீளவிட்டான் ஊராட்சியாக இருந்து வந்த இந்த பகுதி 2008ல் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. புறநகர் பகுதியாக இருக்கின்ற அனைத்து பகுதிகளுக்கும் படிப்படியாக முழுமையான கட்டமைப்புகள் செய்து கொடுக்கப்படும் என்று மாநகராட்சி கூட்டத்தில் தெரிவித்தப்படி மாநகராட்சிக்குட்பட்ட மடத்தூர் விலக்கு பகுதியினை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டு கூறுகையில்
இந்த பகுதியானது தேசிய நெடுஞ்சாலை சந்திப்பை சந்திக்கும் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பகுதியாக இருப்பதாலும் பேருந்து நிறுத்தும் இடத்தில் நிழற்கூடை இல்லாமல் இருக்கின்றது. ஆகவே புதிய நிழற்கூடை மற்றும் இரவு நேரத்தில் இருளடைந்து காணப்படுவதால் மினி ஹை மாஸ் விளக்கு ஒன்றும் அப்பகுதியில் அமைக்க முடிவு செய்து இப்பணிகளானது விரைவில் ஆரம்பமாகும் மேலும் இந்த பணிகள் நிறைவடைந்தால் பொதுமக்கள் மாநகரிலுள்ள பிரதான சாலைகளான பக்கிள் ஓடை மற்றும் 3வது மைல் சாலையை எளிதாக வந்தடைய முடியும் என்றார்.
ஆய்வின் போது மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர், முன்னாள் மாமன்ற உறுப்பினர்களும் வட்ட செயலாளருமான ரவீந்திரன், முன்னாள் கவுன்சிலர் ராஜாமணி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், மற்றும் ஜோஸ்பர், நிர்வாகிகள் அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

