நாகப்பட்டினம் ஜூலை 24
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் குடும்பத்திற்காக வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்குக் கொடுக்கும் அங்கீகாரமாக கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தினை அறிவித்தார்கள். தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்டமான இந்த கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலம் மகளிர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கை தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு, வழிவகுக்கும் முதன்மையான திட்டமாகும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று தர்மபுரி மாவட்டத்தில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000- வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமினை தொடங்கி வைக்கப்பட்டதனை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது. அதனைத்தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளான ஆரியநாட்டுத்தெருவில் உள்ள வலைபின்னும் கூடம், வெளிப்பாளையத்தில் உள்ள புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி, சி.எஸ்.ஐ. பள்ளிக்கு அருகில் உள்ள நூலக கட்டடம், தெற்குபால்பண்ணைச்சேரியில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளி, நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் பாப்பாகோவில் ஊராட்சியில் உள்ள கிராம ஊராட்சி சேவை மைய கட்டிடம், கீழையூர் ஊராட்சி ஒன்றியம் திருப்பூண்டி கிழக்கு ஊராட்சி காமேஸ்வரம் கிராமத்தில் உள்ள சேவை மைய கட்டிடம், அங்கன்வாடி மைய கட்டிடம், கோவில்பத்து கிழக்கு ஊராட்சியில் உள்ள கிராம கூட்டுறவு அங்காடி கட்டிடம் போன்ற இடங்களில் நடைபெற்று வருகின்ற கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது நாகப்பட்டினம் சார் ஆட்சியர் பானோத் ம்ருகேந்தர் லால் வட்டாட்சியர் ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

