தூத்துக்குடி ஜூலை, 25,
தமிழக அரசு, குடும்ப தலைவிக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை அறிவித்து உள்ளது. தூத்துக்குடி
மாவட்டத்தில் அந்தந்த ரேஷன் கடைகள் மூலம் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான விண்ணப்பம் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
ஜூலை 3-வது வாரம் முதல் சிறப்பு முகாம்கள் அமைத்து கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் விண்ணப்பங்கள் ரேஷன் கடைகளில் முகாம் அமைத்து விண்ணப்பங்கள் விநியோகிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும்,
மீன்வளம் மற்றும் கால்நடை துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் ஆலோசனையின் பெயரில் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி பகுதியில் பொதுமக்கள் அனைவரும் விண்ணப்பங்கள் பெறுவதற்கு ஏதுவாக பஞ். தலைவர் சரவணகுமார் அதிகாரிகளுடன் இணைந்து தீவிர களப்பணியில் ஈடுபட்டு நேரடி ஆய்வுகள் மேற்கொண்டார்.


மாப்பிள்ளையூரணி எல்லைக்குட்பட்ட பகுதியான டேவிஸ்புரம், மாப்பிள்ளை யூரணி உள்ள நியாய விலைக் கடைகளில்
மகளிர் உரிமைத் தொகை ரூ.1000க்கான விண்ணப்பம் வழங்கும் பணிகள் நடந்து வந்தன. இதில் பெண்கள் திரளானோர்
வந்து விண்ணப்ப படிவங்களை பெற்று சென்றனர். மாப்பிள்ளை யூரணி பஞ். தலைவரும், தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சரவணகுமார்,
பிடிஓ ஹெலன் பொன்மணி, வசந்தா, முகாம் மேற்பார்வையாளர், மாப்பிள்ளையூரணி கிராம நிர்வாக அதிகாரி சுரேஷ்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் முகாம் நடைபெறும் ரேஷன் கடைகளில் நேரில் ஆய்வு செய்தனர்..
முகாம்கள் நடைபெறும் இடங்களில் பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு குடிநீர் வசதி, மின்விசிறி, மின்வசதி, இருக்கைகள், கழிப்பறை, சாய்வு நடைபாதை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தேவையான இடங்களில் பந்தல்களும், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், கர்ப்பிணிகள் போன்றோருக்கு தேவையான வசதிகளும் ஏற்படுத்தித் தரும் வகையில் பொது மக்களிடம் தேவைகளை கேட்டறிந்தனர்.
பஞ்சாயத்து தலைவர் சரவணகுமார் மற்றும் அதிகாரிகளுடன் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா,, திமுக கிளைச்செயலாளர் காமராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார், மற்றும் கௌதம், ஆகியோர் உடன் இருந்தனர்.
செய்தி தொகுப்பு: எம்.கண்ணன்
போலீஸ் செய்தி நியூஸ்.

