தூத்துக்குடி, ஜூலை,24
தூத்துக்குடி மாவட்டம்
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் சுமார் 68 குக்கிராமங்கள் அடங்கிய பகுதியாக விளங்கி வருகிறது. இந்த பகுதியில் ஏழை எளிய நடுத்தர மக்கள் அதிகம் வாழும் பகுதியாக இருந்து வருகிறது.
பொதுமக்கள் நலன் கருதி இப்பகுதியில் அடிக்கடி மருத்துவ முகாம்கள் பஞ்சாயத்து தலைவர் சரவணகுமார் முயற்சியில் நடைபெற்று வருகிறது. இன்று தமிழ்நாடு அரசு கலைப்பண்பாட்டுத்துறை மாவட்ட அரசு இசைப்பள்ளி அமைந்துள்ள டி.சவேரியார்புரத்தில் தி ஐ பவுன்டேஷன் கண் மருத்துவமணை சார்பில் முகமது பைசல் தலைமையில் மருத்துவக்குழுவினரின் இலவச கண் பரிசோதனை முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன்சங்க தலைவரும் தூத்துக்குடி திமுக கிழக்கு ஒன்றிய செயலாளருமான சரவணக்குமார் கண் பரிசோதனை மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில்
கூட்டுறவு கடன்சங்க துணைத்தலைவர் சிவக்குமார், மருத்துவமுகாம் ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன், ஆலோசகர் ராமலெட்சுமி, ஆப்ரோ மெட்ரிக் இந்திரா நம்பி, மாவட்ட அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் சிவகாமி செல்வி, மற்றும் செல்வகுமாரி, கிருஷ்ணவேணி, ஆகியோர் கலந்து கொண்டனர். மருத்துவ முகாம் நிகழ்ச்சிக்கு முன்பு மாவட்ட அரசு இசைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களின் சார்பில் நாட்டியம் சிலம்பாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனை மாப்பிள்ளையூ ரணி பஞ்சாயத்து தலைவர் சரவணகுமார்
உட்பட அனைவரும் பார்த்து ரசித்தனர். பின்னர் மாணவ மாணவியர்களை சரவணகுமார் பாராட்டினார். இதனைத் தொடர்ந்து
மாப்பிள்ளையூரணியில் சிஎஸ்ஐ தூய யோவோன் ஆலயம் மற்றும் அகர்வால் மருத்துவமணை தூத்துக்குடி இணைந்து நடத்திய இலவச கண் மருத்துவ பரிசோதனை முகாம் ஆலய வளாகத்தில் வைத்து நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமை பாதர் ஸ்டீபன் நீல் ஜெபம் செய்தார். மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் துவக்கி வைத்தார். முகாமில் பொதுமக்களுக்கு தூரத்துபார்வை கிட்டப்பார்வை வெள்ளெழுத்து கண்புரை நோய் உள்ளிட்ட பல்வேறு கண்சம்பந்தப்பட்டவைகளுக்கு கண் பரிசோதனை நடத்தப்பட்டன.


இதில் கூட்டுறவு கடன்சங்க துணைத்தலைவர் சிவக்குமார், மாப்பிள்ளையூரணி ஊர் தலைவர் பெத்து பாலமுருகன், திமுக கிளைச்செயலாளர் காமராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தகுமார், முகாம் ஓருங்கிணைப்பாளர் அழகுலிங்கம், மற்றும் உமாமகேஸ்வரி, பூர்னா, கௌதம் தேவாலய சபை உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏழை, எளிய, மக்கள், அதிகமாக வசித்து வரும் மாப்பிள்ளை யூரணி பகுதியில் அடிக்கடி மருத்துவ முகாம்கள் நடத்தி பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் இடைவிடாமல் பணியாற்றி வரும் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவர் நேற்று கலைஞரின் வருமுன் காப்புத் திட்டம் பொது மருத்துவ முகாமை துவக்கி வைத்தார்.இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் மக்கள் பயனடைந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று மட்டும் 2 இடங்களில்
இலவச கண் மருத்துவ பரிசோதனை முகாமை மாப்பிள்ளையூரணி பகுதியில்
பஞ்சாயத்து தலைவர் சரவணகுமார் துவக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இப்பகுதியில் நடைபெறும் மருத்துவ முகாம் நிகழ்ச்சிக்கு பஞ்சாயத்து தலைவர் முழு ஒத்துழைப்பு கொடுத்து முன்னின்று நடத்தி வருவதை அப்பகுதி பொதுமக்கள் மனதார பாராட்டி வருகிறார்கள்
செய்தி தொகுப்பு எம். கண்ணன்
போலீஸ் செய்தி நியூஸ்

