தூத்துக்குடி
தமிழக அரசின் வனத்துறை சார்பில் சுற்றுசூழலை பேணி பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாசில்லா மாநிலத்தை உருவாக்கும் வகையில் அனைவரும் பாடுபட வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வனத்துறை மூலம் நடைபெற்ற விழாவில் கேட்டுக்கொண்டார்.
அதற்கிணங்க ஊராட்சி, பேருராட்சி, நகராட்சி, மாநகராட்சி மூலம் தமிழகம் முழுவதும் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன.
இதே போல் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சியானது 68 குக்கிராமங்கள் அடங்கிய பகுதி ஆகும். அதில் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத பகுதிகளில் மரக்கன்று நட்டி மாசு இல்லாத மாப்பிள்ளையூரணியை உருவாக்கி தமிழக அரசின் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் வகையில் யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின், யூனியன் பேங்க் சோஷியல் பவுண்டேஷன் டிரஸ்ட் சார்பாக கீரினர் எர்த் திட்டத்தின் கீழ் மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் மரக்கன்று நடுவதற்கு திட்டங்கள் தயாரிக்கப்பட்டு முதல் கட்டமாக மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம் மற்றும் மீனவர் நலன் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆலோசனைபடி நடைபெற்ற விழாவிற்கு மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும், கூட்டுறவு கடன் சங்க தலைவரும் தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளருமான சரவணக்குமார் தலைமை தாங்கி மரக்கன்று நடும் திட்டத்தை துவக்கி வைத்தார். இதில் மா மரம், நாவல் பழ மரம் மற்றும் பல்வேறு வகையான பலன் தரும் மரக்கன்றுகள் நடப்பட்டன.
இதனையடுத்து மாப்பிள்ளையூரணி கூட்டுறவு கடன் சங்க வளாகம் மற்றும் தாளமுத்து நகர் மெயின், உள்ளிட்ட 200 இடங்களில் மரக்கன்றுகள் நடப்படுகின்றன. யூனியன் பேங்க் ஆப் இந்தியா தூத்துக்குடி கிளை மேலாளர் சேசு மாரிகுமரன், விவசாய அதிகாரி தமிழ்செல்வி, மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்க மாரிமுத்து, சமூக ஆர்வலர் தொம்மை அந்தோணி மற்றும் கௌதம், வங்கி அலுவலர்கள், ஊராட்சி மன்ற அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

