வருகின்ற தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு தூத்துக்குடி நகர உட்கோட்டம் தாளமுத்துநகர் மற்றும் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் தலைமையில் காவல்துறை மற்றும் துணை ராணுவபடையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
வருகின்ற தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு காவல்துறை மற்றும் துணை ராணுவப்படையினரின் கொடி அணிவகுப்பு நேற்று தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார்தலைமையில் தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிலுவைபட்டி ஜங்ஷனில் தொடங்கி சிலுவைபட்டி, அழகாபுரி, தாளமுத்துநகர் பஜார், ராஜபாளையம், அலங்காரதட்டு, லூர்தம்மாள்புரம், S.S மாணிக்கபுரம் வழியாக தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திரேஸ்புரம் வந்து கொடி அணிவகுப்பு நிறைவடைந்தது.
இந்த கொடி அணிவகுப்பில் தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ், எல்லை பாதுகாப்பு படை துணை தளபதி ஏ.கே. லேம்கான், தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயந்தி, வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் அருள், தாளமுத்துநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் ஜான்சன், மகாராஜன் மற்றும் ஆயுதப்படை உதவி ஆய்வாளர் உட்பட அஸ்ஸாம் மாநில எல்லை பாதுகாப்பு படையினர் 90 பேர், ஆயுதப்படை காவலர்கள், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர் மற்றும் உள்ளூர் போலீசார் உட்பட 200 பேர் கலந்து கொண்டனர்.




