தூத்துக்குடி
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் 68 குக்கிராமங்கள் உள்ளடக்கிய ஒன்றரை லட்சம் பொதுமக்கள் வாழும் பகுதியில் 40 ஆயிரம் வாக்களிக்கும் வாக்காளர்கள் உள்ள மிகப்பெரிய ஊராட்சியாக இருந்து வருகிறது. எல்லா பகுதிகளுக்கு சுழற்சி முறையில் தூய்மை காவலர்கள் அப்பகுதிகளில் குப்பைகள் மற்றும் தேவையற்ற கழிவு பொருட்களை இல்லம் தோறும் சென்றும் சாலையோரங்களில் வீசப்படுபவைகளை சேகரித்து அதில் மக்கும் குப்பை மக்காத குப்பை என்று தரம் பிரித்து தூய்மையை பேணி பாதுகாத்து வருகின்றன.
இந்நிலையில் குப்பை சேகரிப்பதற்கு போதிய வாகனம் இல்லாத நிலை இருந்து வந்தது. மக்கள் நலன் கருதி மாப்பிள்ளையூரணி ஊராட்சி நிதியிலிருந்து வாங்கப்பட்ட 12 குப்பை சேகரிக்கும் புதிய வாகனத்தை மக்கள் பயன்பாட்டிற்கு ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன்சங்க தலைவரும் தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சரவணக்குமார் துவக்கி வைத்தார்.
பின்னர் தூய்மை காவலர்கள் மத்தியில் கூறுகையில் இந்த பகுதியில் உள்ள மக்களில் நலன் கருதி தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் மீனவர் நலன் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனை படி ஏற்கனவே மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை தூய்மை பாரத இயக்கம் ஊராட்சி மூலம் நம் பகுதியை தூய்மையாக வைத்திருந்தால் நமது கிராமம் தூய்மையாக மாறும் பிளாஸ்டிக்கை ஒழிப்போம், பிளாஸ்டிக் இல்லாத தமிழகம் படைப்போம், நாம் ஒன்றினைவோம் தூய்மையும் பசுமையும் நமதாக்குவோம். நமது கிராமம் மேலும் தூய்மையான கிராமமாக மாற நாமும் பங்களிப்போம். மரம் வளர்ப்போம் மழை பெறுவோம். என்ற நடைமுறையை பின்பற்றி வருகிறோம். தொடர்ந்து தூய்மை காவலர்களின் சேவையும் தேவையும் இந்த மாப்பிள்ளையூரணி பகுதி சுகாதாரத்திற்கு முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளரும் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற உறுப்பினருமான ஸ்டாலின், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, பாலம்மாள், திமுக ஒன்றிய துணைச்செயலாளர்கள் ராமசந்திரன், கணேசன், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆனந்தகுமார், ஜெயசீலன், திமுக கிளைச்செயலாளர் காமராஜ், தூய்மை கண்காணிப்பாளர்கள், தூய்மை காவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர் ஜெயக்குமார் அனைவருக்கும் நன்றி கூறினார்.

