தூத்துக்குடி
தமிழக அரசின் சார்பில் தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு தந்தி ஆபீஸ் முன்பிருந்து பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சிக்கு சப்கலெக்டர் கௌரவ்குமார், தலைமை வகித்தார். சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கொடியசைத்து விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் நிறைவடைந்தது.
பேரணியில் மாணவ மாணவிகள் “தமிழ் எங்கள் பிறவித்தாய்” “இன்றும் தமிழ் என்றும் தமிழ்” “தமிழ் எங்கள் உயிர்க்கு நேர்” “தமிழ் எங்கள் உயிர்க்கு வான்” பல்வேறு வாசகங்களை அடங்கிய பாதாகைகளை எடுத்துச் சென்றனர்.
பேரணியில் மாநகராட்;சி ஆணையர் தினேஷ்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி, கல்வி அலுவலர் குருநாதன், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், மாவட்;ட பிரதிநிதி செந்தில்குமார், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மயிலேறும் பெருமாள், இன்ஸ்பெக்டர் ஐயப்பன், தமிழ்வளர்ச்சி துறை அலுவலர்கள், மற்றும் மணி, அல்பட், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன்பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

