விளாத்திகுளம் உட்கோட்டத்தில் இரவு வாகன தணிக்கையை தீவிரப்படுத்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்கள் உத்தரவிட்டத்தின் பேரில் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் மேற்பார்வையில் புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செங்கோட்டை விலக்கு பகுதியில் புதூர் உதவி ஆய்வாளர் திரு.ராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் காவல் ஆளினிர்கள் வாகன தணிக்கை செய்தார்கள்*
அப்பொழுது வந்த TN 20 AF 5566 லாரியை நிறுத்தி சோதனை செய்து பார்த்ததில் வண்டியில் 3 யூனிட் M sand யை சட்ட விரோதமாய் இரவு நேரத்தில் அனுமதி சீட்டு இல்லாமல் கொண்டு வந்தது கண்டறிந்து அந்த லாரியையும் லாரியின் ஓட்டுநரையும் காவல் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்தார்கள்.
திறமையயாக பணிசெய்த உதவி ஆய்வாளர் திரு.ராமச்சந்திரன் மற்றும் காவல் ஆளினர்களை விளாத்திகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்

