தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் இன்று தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்திற்கு சென்று அங்கு பராமரிக்கப்படும் ஆவணங்கள் மற்றும் முக்கிய வழக்கு கோப்புகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் மேற்படி காவல் நிலைய போலீசாருக்கு மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்து அறிவுரைகள் வழங்கினார்.
அப்போது தென்பாகம் காவல் நிலையத்தில் சிறப்பாக பணியாற்றிய தலைமை காவலர்கள் மாரியப்பன், பாலசுப்பிரமணியன், லட்சுமணன், முதல் நிலை காவலர்கள் சேகர் மற்றும் அருண்சுந்தர் ஆகியோருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுமதி வழங்கி பாராட்டினார்.


பின் தென்பாகம் காவல் நிலையத்தை புதுப்பித்து புதுப்பொலிவுடன் சுத்தமாக பராமரித்து வைத்திருந்த தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் தலைமையிலான போலீசாரை பாராட்டியும், மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களையும் இதுபோன்று சுத்தமாக வைத்து பராமரிக்குமாறு அனைத்து காவல் ஆய்வாளர்களையும் அறிவுறுத்தியுள்ளார். பின் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தென்பாகம் காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்று நட்டார்.
ஆய்வின்போது தூத்துக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ், தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம், உதவி ஆய்வாளர் சிவக்குமார், பயிற்சி உதவி ஆய்வாளர் ராமலெட்சுமி உட்பட காவல் ஆளினர்கள் அனைவரும் உடனிருந்தனர்.

