தூத்துக்குடி கடந்த காலங்களில் எதிர்பாராமல் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகள் மழைநீரால் பாதிக்கப்பட்டது. இதில் பொதுமக்கள் மட்டுமின்றி பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இனி வரும் காலங்களில் இது போன்ற நிலை இருக்க கூடாது. என்று தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். அதனடிப்படையில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு மழைநீர் தேங்கிய பகுதியான மாநகராட்சிக்குட்பட்ட பாளையங்கோட்டை சாலையில் நடைபெற்று வரும் புதிய வடிகால் கட்டுமானப் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார். இப்பணியானது விவிடி சிக்னல் எதிர்புறத்தில் இருந்து இசக்கி அம்மன் கோயில் வரை தற்போது நடைபெற்று வருகின்றது மேலும் பணிகளை விரைந்து முடிக்குமாறு ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
முன்னாள் மாமன்ற உறுப்பினரும் வட்ட செயலாளருமான ரவீந்திரன் மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், மற்றும் ஜோஸ்பர், துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

