தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் உள்ள பல்வேறு கால்வாய்கள் மற்றும் பக்கிள் ஓடைகள் மூலம் தேவையற்ற கழிவுநீர் திரேஸ்புரம் கடல்பகுதிக்குள் வடிகால் மூலம் செல்கிறது. பருவநிலை மாற்றம் கடல் மட்டம் உயர்வின் காரணமாக அப்பகுதியில் உள்ள தாழ்வான குடியிருப்பு பகுதிக்கு கழிவுநீர் வருவதாகவும் கால்வாய் உயரமாக இருப்பதாகவும் அதை சீர் செய்து தரவேண்டும் என்று அமைச்சரிடம் கோரிக்கை வைத்ததையடுத்து.

திரேஸ்புரம் பகுதிக்குட்பட்ட சங்குகுழி காலணியில் உள்ள பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து அதற்கு தகுந்த சீரமைப்பு பணிகள் மூலம் குறைகளை தீர்த்து வைப்பதாக அப்பகுதி மக்களிடம் உறுதியளித்து மேற்கொள்ள வேண்டிய பணிகளை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் ஆய்வு செய்தார். மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்டலத்தலைவர் நிர்மல்ராஜ், கவுன்சிலர் பவாணி மார்ஷல், வட்டச்செயலாளர் ரவிசந்திரன், மற்றும் மணி, அல்பட் உள்பட பலர் உடனிருந்தனர்.

