• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி கோவில் அறங்காவலர் குழு தலைவர்கள் தேர்வு

policeseithitv by policeseithitv
July 12, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி கோவில் அறங்காவலர் குழு தலைவர்கள் தேர்வு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி.

தமிழக அரசின் நிர்வாகத்துறையின் கீழ் வரும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் தமிழகம் முழுவதும் உள்ள இந்து கோவில்களுக்கு கடந்த அதிமுக ஆட்சியில் அறங்காவலர்கள் நியமனம் செய்யப்படாமல் இருந்து வந்தன.

இந்நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்றப் பின் தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தூத்துக்குடியில் பிரசித்திப்பெற்ற தெப்பக்குளம் மாரியம்மன் கோவில், மேலூர் பத்திரகாளியம்மன் கோவில் ஆகிய 2 கோவில்களுக்கு பொறுப்பு அறிவிக்கப்பட்டு, அதற்கான அரசாணையை டூவிபுரத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் அறங்காவலர்களாக செல்வசித்ரா அறிவழகன், மகாராஜன், பாலகுருசாமி, மேலூர் பத்திரகாளியம்மன் கோவில் அறங்காலர்களாக கீதா செல்வமாரியப்பன், மகேஸ்வரன், மஞ்சுளா, ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் நியமன ஆணை வழங்கினார்.

இந்நிலையில், தெப்பகுளம் மாரியம்மன் கோவிலில் வைத்து இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதா தலைமையில் செயல் அலுவலர் குலசை ராமசுப்பிரமணியன், ஆய்வாளர் ருக்மணி ஆகியோர் அடங்கிய குழுக்கள் மூலம் அறங்காவலர் குழு தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது.

அதில் கோவில் அறங்காலர்களாக உள்ள செல்வசித்ரா அறிவழகன், மகாராஜன், பாலகுருசாமி வாக்களித்தனர். அதில் அறங்காவல்குழு தலைவராக செல்வசித்ரா அறிவழகன் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார். அதேபோல், மேலூர் பத்திரகாளியம்மன் கோவிலில் வைத்து நடைபெற்ற தேர்வில் அறங்காலர்களாக உள்ள கீதா செல்வமாரியப்பன், மகேஸ்வரன், மஞ்சுளா ஆகியோர் வாக்களித்தனர். அதில் அறங்காவல்குழு தலைவராக கீதா செல்வமாரியப்பன் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றுக்கொண்டார். இரு ஆலயங்களிலும் சிறப்பு பூஜை நடைபெற்று, பிரசாதங்கள் வழங்கப்பட்டனர்.

பின்னர் பொறுப்பேற்றுக் கொண்ட அனைவருக்கும் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கோட்டுராஜா, முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினர் செந்தில்குமார், முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலர் கந்தசாமி மற்றும் கோபால் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

Previous Post

தூத்துக்குடி பாளை ரோடு கால்வாய் பணி மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு

Next Post

தூத்துக்குடியில் திமுக இளைஞர் அணியினர் அமைச்சர் அனிதா ராதாகிருஷண்னிடம் வாழ்த்து பெற்றனர்.

Next Post
தூத்துக்குடியில் திமுக இளைஞர் அணியினர் அமைச்சர் அனிதா ராதாகிருஷண்னிடம் வாழ்த்து பெற்றனர்.

தூத்துக்குடியில் திமுக இளைஞர் அணியினர் அமைச்சர் அனிதா ராதாகிருஷண்னிடம் வாழ்த்து பெற்றனர்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In