• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் திமுக இளைஞர் அணியினர் மேயர் ஜெகன் பெரியசாமியிடம் வாழ்த்து பெற்றனர்.

policeseithitv by policeseithitv
July 11, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் திமுக இளைஞர் அணியினர் மேயர் ஜெகன் பெரியசாமியிடம் வாழ்த்து பெற்றனர்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி

திராவிட முன்னேற்ற கழகத்தின் 15-வது கழக தேர்தல் முறையாக மாநிலம் முழுவதும் தேர்தல் ஆணையம் வழி முறைக்கிணங்க தேர்தல் நடைபெற்று கிளை செயலாளர் முதல் மாவட்ட செயலாளர் வரை முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். திமுக தலைவராக முதலமைச்சர் ஸ்டாலின், பொதுச்செயலாளராக அமைச்சர் துரைமுருகன், பொருளாளராக பாலு, துணை பொதுச்செயலாளராக கனிமொழி எம்.பி உள்ளிட்ட உயர்மட்ட முக்கிய நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அதன்பின் திமுகவின் கட்டமைப்பு படி 23 அணிகள் முறையாக செயல்படுகின்றன. அதற்கும், மாநில, மாவட்ட, ஒன்றிய அளவில் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், மாநில இளைஞரணி செயலாளரும், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் இளைஞரணி பொறுப்பை வழிநடத்தி 5ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். திமுகவில் பல்வேறு அணிகள் இருந்தாலும் முதன்மை அணியாக செயல்படுவது இளைஞரணி தான். திமுக கட்சியின் கொள்கைகளை தீவிரமாக அனைத்து தரப்பு மக்களுக்கும் எடுத்துச் செல்லும் பொறுப்பில் இளைஞரணி நிர்வாகிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இது கடந்த காலத்தில் ஸ்டாலின் இருந்த காலம் தொட்டு இன்று வரை தொடர்கிறது.

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத்திலும் இளைஞரணி பொறுப்புக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் நேர்காணல் நடத்தப்பட்டு, திமுக ஆட்சியில் இல்லாத 10 ஆண்டுகள் தொடர்ந்து திமுகவில் பணியாற்றியதையும், கழகம் அறிவித்த போராட்டங்களில் பங்கெடுத்துக் கொண்ட விவரத்தையும் கேட்டறிந்து, குறிப்பாக அவர்களில் தீவிர களப்பணி ஆற்றுபவர்கள் யார் என்பதை கண்டறிந்தார். அதில் துடிப்புடன் செயல்படும் இளைஞரணி நிர்வாகிகள் பட்டியலை சில தினங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

இதன்படி வடக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளராக சிஎம் மதியழகன், துணை அமைப்பாளர்களாக பிரதீப், மகேந்திரன், ராதா கிருஷ்ணன், பாரதி, ஜோசப் அமல்ராஜ், மாநகர இளைஞர் அணி அமைப்பாளராக அருண்சுந்தர், துணை அமைப்பாளராக சங்கரநாராயணன், சிவக்குமார் என்ற செல்வின், ரவீ, முகம்மது ஜெயலாப்தீன், பிரவீன்குமார், ஆகியோர் நியமணம் செய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து மாநகராட்;சி மேயர் ஜெகன் பெரியசாமியை அவரது அலுவகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். புதிய நிர்வாகிகளிடம் மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில் தமிழக முதலமைச்சர் தளபதியார் ஆட்சியில் செய்த சாதனைகளையும் திட்டங்களையும் மாநில வளர்ச்சி பணிகளையும் அனைத்து தரப்பினர்கள் மத்தியிலும் கொண்டு போய் சேர்க்க வேண்டும். 2024ல் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் இளைஞர் அணியின் பங்கு அதிகம் இருக்க வேண்டும் அதிக உறுப்பினர்களை சேர்த்து மற்ற மாவட்டங்களை காட்டிலும் நமது மாவட்டம் முன்னோடி மாவட்டமாக திகழ்வதற்கு ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Previous Post

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டடரங்கில் மகளிர் திட்டம் சார்பில் திறன் பயிற்சிகள் குறித்த வழிகாட்டுதல் பெற வாழ்வாதார உதவி அழைப்பு எண்ணை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டார். 

Next Post

தூத்துக்குடி மாநகராட்சி – மேலூர் ரயில் நிலையத்திலிருந்து எட்டயபுரம் சாலை மற்றும் ஜெயராஜ் சாலை செல்வதற்கான இணைப்பு பாதை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

Next Post
தூத்துக்குடியில் திமுக இளைஞர் அணியினர் மேயர் ஜெகன் பெரியசாமியிடம் வாழ்த்து பெற்றனர்.

தூத்துக்குடி மாநகராட்சி - மேலூர் ரயில் நிலையத்திலிருந்து எட்டயபுரம் சாலை மற்றும் ஜெயராஜ் சாலை செல்வதற்கான இணைப்பு பாதை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In