தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பல்வேறு பணிகள் தொகுதி முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் பல்வேறு தரப்பினர் வைக்கும் கோரிக்கைகளுக்கு எந்த பணிக்கு முக்கியத்துவம் முதலில் கொடுக்க வேண்டும் என்று மக்கள் நலன் கருதி பணிகள் நடைபெற்று வரும் நிலையில் முள்ளக்காடு ஊராட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள் குடிதண்ணீர் தேவை அதிகரித்து இருப்பதால் நீர்த்தேக்க தொட்டி கட்டி தரவேண்டும் என்று அமைச்சரிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
இதனையடுத்து சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ13 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்படும் இடத்தில் வடக்;கு மாவட்;ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், வட்டப்பிரதிநிதி பாஸ்கர், மற்றும் மணி, அல்பட், உள்பட பலர் உடனிருந்தனர்.

