தூத்துக்குடி.
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் 60க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் இருந்து வருகின்றனர். தமிழகத்தில் வளர்ந்து வரும் பெரிய ஊராட்சியாக மாப்பிள்ளையூரணி இருந்து வரும் நிலையில் பல்வேறு பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள், பொதுநல அமைப்புகள் சார்பில் குண்டும் குழியுமான சாலைகளை சீரமைத்து, புதிய சாலைகள் அமைத்து தர வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளனர்.
இதில் தேசிய நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான பகுதிகளில் நெடுஞ்சாலை துறை சில இடங்களில் பணிகளை தொடங்கி, பாதியில் விட்டு சென்ற நிலையில், காட்சிப்பொருளாகவும் இருந்து வருகின்றன. இதை நெடுஞ்சாலை துறை கண்டுகொள்ளாமலும், இருந்து வருகிறது. மாப்பிள்ளையூரணி ஊராட்சி நிர்வாகத்தின் கீழ் செயல்படுத்தப்படும், அனைத்து பகுதிக்கும் சாலை வசதிகளை பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சில பகுதிகளில் தார் சாலைகளும், பேவர் பிளாக் சாலைகளும் அமைக்கப்பட்டு வருகின்றனர்.
மாப்பிள்ளையூரணியில் உள்ள குறுக்குத் தெருவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சாலைகள் அமைக்கப்படாமல் காட்சிப் பொருளாக இருந்து பொதுமக்கள் வந்து செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டனர். மாப்பிள்ளையூரணி ஊராட்சி நிர்வாகத்திடம் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் மாப்பிள்ளையூரணி ஊராட்சி பொதுநிதியில் இருந்து ரூ.4 லட்சத்து 10 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதன்அடிப்படையில் குறுக்குச்சாலையில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டு, மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும், கூட்டுறவு கடன் சங்க தலைவரும் தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளருமான சரவணக்குமார் பார்வையிட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
ஊராட்சி மன்ற உறுப்பினர் மகேஸ்வரி காமராஜ், திமுக கிளைச் செயலாளர் காமராஜ், மாவட்ட பிரதிநிதி சிவக்குமார், ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பார்வதி, முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார் மற்றும் பொன்மணி, அப்பகுதி பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில்: இந்த பகுதியில் வெகுநாட்களாக போடப்படாத சாலைகளால் நாங்கள் சிரமப்பட்டு வந்த நிலையில், தற்போது புதிய பேவர் பிளாக் சாலை போடப்பட்டுள்ளதால் இப்பகுதி பொதுமக்களாகிய நாங்கள் மிகவும் பயனடைந்துள்ளோம். ஊராட்சி மன்ற நிர்வாகத்திற்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறினர்.

